search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
    • கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    வழக்கமாக இதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தென்படும். இந்த ஆண்டு இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. இதனால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் எனக்கூறப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த மழை தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

    தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகள், அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Next Story
    ×