search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கக்கடலில் புயல் சின்னம் காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு
    X

    தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கடலோர மீனவ கிராமங்கள், தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    வங்கக்கடலில் புயல் சின்னம் காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு

    • மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×