search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shopping mall"

    • இந்திய வம்சாவளி தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
    • வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வணிக வளாகத்தில் புகுந்த ஆண் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் அவரை பிடித்து சுட்டுக்கொன்றது. இதனிடையே கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

    அவருடைய பெயர் ஜோயல் காச்சி (40) என்பதும் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத தாக்குதலோ, திட்டமிட்ட சதியோ கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியை பெண் போலீஸ் அதிகாரி எமி ஸ்காட் சம்பவ இடத்தில் லாவகமாக மடக்கி பிடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமயோசிதமாக செயல்பட்டு பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்திய எமி ஸ்காட்டுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளி தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். சிட்னி நகரை சேர்ந்த டெபாஷிஸ் சக்ரபர்த்தி-ஷாய் கோஷல் தம்பதி சம்பவம் நடந்தபோது வணிக வளாகத்தில் இருந்துள்ளனர். தாக்குதலின்போது அங்குள்ள சேமிப்பு கிட்டங்கியில் மறைந்திருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றி கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இரங்கல் தெரிவித்தார். சம்பவம் நடந்த வணிக வளாக கட்டிடத்திற்கு நேரடியாக வந்த அவர், வணிக வளாகம் முகப்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
    • தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் (உள்ளூர் நேரம்) நுழைந்த ஒருவர் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கத்தியை வைத்து மற்றவர்களை தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் நிலைமைகள் இன்னும் தெரியவில்லை என்று தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

    துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தாக்குதலுக்கு பிறகு ஷாப்பிங் மாலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இனிமேல் யாரும் இங்கு வரவேண்டும் என்று காவல்துறை தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
    • டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் சினிமா தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் உள்ளது. நேற்று விடு முறையையொட்டி வணிக வளாகத்திலும், தியேட்டர்க ளிலும் அதிக ளவு பொதுமக்கள் கூட்டம் இருந்தது.

     வணிக வளாகத்தின் 3-ம் தளத்தில் உள்ள உணவு அரங்கில் பல நிறுவனங்கள் உள் ளன. இதில் பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது இரவு 7 மணி அளவில் ஒரு உணவகத்தில் திடீரென தீ பற்றியது. அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியது. உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பான்கள் உதவியுடன் தீயை அணைத்

    தனர். இருப்பினும் அங்கிருந்து பொதுமக்கள் அலறிய டித்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வணிக வளாக நிறுவனத்தினர் 3-ம் தளத்திலிருந்த அனைத்து கடைகளையும் மூடி, பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். 4-ம் தளத்தில்தான் 5 தியேட்டர்கள் உள்ளன.

    அங்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த வர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு தீ முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டதால் மேலும் பரவும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின் மீண்டும் பொதுமக்கள் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உணவகங்கள் திறக்கப்பட்டது.

    இதனால் புதுவை- கடலூர் சாலையில் பரபரப்பு நிலவியது. உருளையான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டது எப்படி.? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீவிபத்தில் சிக்கி அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.



    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 குழந்தைகள் சிக்கி பலியாகினர்.



    இந்நிலையில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
    குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

    இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.



    மளமளவென பரவி வரும் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகி்ன்றனர்.

    சூரத் நகரில் தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    ×