search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 killed"

    குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 குழந்தைகள் சிக்கி பலியாகினர்.



    இந்நிலையில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
    ஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #EcuadorFireAccident
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #EcuadorFireAccident
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். #Afghanistantaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் தக்கார்  மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில்  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #Afghanistantaliban
     
    பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #PeruAccident
    லிமா:

    பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PeruAccident
    எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.

    ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. #Accident
    கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #CarBombAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் உள்ளது அல் பெய்ரா நகரம். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அமெரிக்க கூட்டு படைவீரர்கள் 11 பேர் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 7 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். #CarBombAttack
    ×