என் மலர்

  நீங்கள் தேடியது "Military helicopter crash"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியாயினர். #Militaryhelicopter #Nigeria
  லாகோஸ்:

  நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

  ராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.  அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Militaryhelicopter #Nigeria
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
  அடிஸ் அபாபா:

  எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.

  ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

  ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. #Accident
  ×