என் மலர்
செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாப பலி
எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.
ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. #Accident
Next Story