என் மலர்
நீங்கள் தேடியது "Peru"
- அவள் என் அறையில் இருக்கிறாள், அவள் என்னுடன் தூங்குகிறாள்.
- போலீசார் அவரது வீட்டில் ஒரு பைக்குள் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை பறிமுதல் செய்துள்ளனர்.
பெரு நாட்டில் மத்திய கடற்கரை பகுதியான லிமா பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள புனோ பகுதியை சேர்ந்த ஜூலியோ சிசர் பெர்மேஜா என்ற 26 வயதான வாலிபர் வீட்டில் மம்மி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவரது வீட்டில் ஒரு பைக்குள் இருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜூலியோ சிசர் பெர்மேஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த மம்மியை 'ஜூவானிட்டா' என்று பெயர் சொல்லி அழைத்தார். மேலும் ஜூவானிட்டா எனது ஆன்மீக காதலி போன்றவர் என கூறிய அவர், அவள் என் அறையில் இருக்கிறாள், அவள் என்னுடன் தூங்குகிறாள். நான் அவளை கவனித்து கொள்கிறேன் என்றார்.
மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இந்த மம்மியை வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும் ஜூலியோ சிசர் பெர்மேஜா கூறினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel
லிமா:
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். அவர்கள் மூலம் இவை கடத்தப்படுவதால் நாட்டில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க பெரு நாட்டில் கொலம்பியா எல்லையில் புதுமேயோ பகுதியில் உள்ள அமேஷோனியன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்கான உத்தரவை பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஷ்காரா பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து எல்லையில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கொலம்பியாவின் ராணுவமும், போலீசும் உதவி வருகிறது. போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவலை கண்காணிக்க 5 ஹெலிகாப்டர்கள், 3 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 50 பேரை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Drugsmuggling


