search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world cup 2018"

    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    லண்டன்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று ‘சி’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்த பிரிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் கால்இறுதியை உறுதி செய்தது. அர்ஜென்டினா (4 புள்ளி), ஸ்பெயின் (3 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டின. தென்ஆப்பிரிக்கா (2 புள்ளி) வெளியேறியது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினாவிற்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் அர்ஜென்டினாவையும், காலிறுதியில் உருகுவே அணியையும், அரையிறுதியில் பெல்ஜியத்தையும், இறுதிப் போட்டியில் குரோசியாவையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த தொடரில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கோல்கள் அடிக்கப்பட்டது. இதில் 18 கோல்களை தேர்வு செய்து, அதில் எது சிறந்தது என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய பிபா ஏற்பாடு செய்தது. இதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாக்களித்தனர்.

    இதில் அர்ஜென்டினாவிற்கு எதிராக நாக்அவுட் போட்டியில் பிரான்ஸ் வீரர் பெஞ்ஜமின் பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



    நாக்அவுட் சுற்றில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என முன்னிலைப்  பெற்றிருந்தது. அதன்பின் பவார்டு அடித்த அற்புதமான கோலால் பிரான்ஸ் 2-2 என சமநிலைப் பெற்றது. இதன்பின் பிரான்ஸ் 4-2 என வெற்றி பெற்றது. பவார்டின் கோல்தான் பிரான்ஸ் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது.

    ஜப்பானுக்கு எதிராக கொலம்பியா வீரர் குயின்டேரோ அடித்த கோல் 2-வது இடத்தையும், அர்ஜென்டினாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் அடித்த கோல் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. #WomenHockey #WorldCup2018 #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அயர்லாந்து அணி ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறும். கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்ஆப்பிரிக்கா (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அது எங்களுக்கு நல்ல தொடக்கமாகும். அந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல நேர்மறையான எண்ணங்களை பெற்று இருக்கிறோம். அது இந்த போட்டி தொடரில் வரும் ஆட்டங்களில் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நமது அணியின் ஆட்ட திறன் எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் அந்த ஆட்டத்தின் வீடியோவை அணியினர் அனைவரும் பார்த்ததுடன், இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து ஆலோசித்தோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்கலாம் என்பதே எங்கள் எண்ணமாகும்.

    அமெரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் வீடியோ பதிவையும் நாங்கள் பார்த்தோம். அந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே நல்ல முன்னிலை பெற்றதுடன் அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது. கடந்த 3 நாள் ஓய்வில் எங்களுக்குள் சில பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டோம். கோல் அடிப்பது குறித்து வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தோம். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் எதிரணிக்கு நெருக்கடி அளிக்க வேண்டும். அடுத்த சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenHockey #WorldCup2018 #India #Ireland 
    இனவெறி தாக்குதல் நடைபெற்றதாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை துருக்கி அதிபர் பாராட்டியுள்ளார். #MesutOzil
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 2014 சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. ஜெர்மனி அணியில் 29 வயதான மெசுட் ஒசில் இடம்பிடித்திருந்தார். இவரது பூர்வீகம் துருக்கியாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்திருந்தார்.

    இந்த போட்டோவை வெளியிட்டு ஜெர்மனி அணிக்காக விசுவாசமாக விளையாடினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அணியின் முதன்மை அதிகாரிகளில் சிலர் எர்டோகனுடன் சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டிறிந்தனர்.

    இதனால் மனமுடைந்த மெசுட் ஒசில் ஜெர்மனி அணியில் அருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘நான் மெசுட் ஒசில் உடன் போனில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது. இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஒசிலின் கண்களில் முத்தமிட்டேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ஜெர்மனி கால்பந்து அணியின் அட்டக்கிங் மிட்பீல்டரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #MesutOzil
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு வெளியேறிது.

    இதனால் ஜெர்மனி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது. குறிப்பாக 29 வயதாகும் மெசுட் ஒசில் மீது வார்த்தை தாக்குதல் நடத்தப்பட்டது. மெசுல் ஒசிலின் பூர்விகம் துருக்கியாகும். கடந்த மே மாதம் அவர் துருக்கி அதிபரை சந்தித்திருந்தார். இதுகுறித்த படத்தை வெளியிட்டு, ஜெர்மனிக்கு விசுவாசமாக ஒசில் விளையாடினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டகப்பட்டது.



    இந்நிலையில் தன்மீது இனவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும், அவமதிப்பு செய்ததாகவும் உணர்கிறேன். இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    ரஷியாவில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்ற கோப்பையை கைப்பற்றியது. குரோசியா 2-வது இடம் பிடித்தது.

    ரஷியாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் உலகக்கோப்பை தொடரை காண்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ரஷியா வரவேண்டும் என்பதற்காக அதிபர் புதின் பல்வேறு சலுகைகள் வழங்கினார்.



    இதனால் வெளிநாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியை ரசிப்பதற்காக ரஷியாவில் குவிந்தனர். அதேபோல் உள்ளூர் ரசிகர்களும் அதிக அளவில் நேரில் சென்று போட்டியை ரசித்தார்கள்.



    ஒட்டுமொத்த போட்டிகளையும் 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை பார்த்த ரசிகளின் எண்ணிக்கையை விட 25 லட்சம் அதிகமாகும்.
    பிரான்ஸ் அணியின் இளம் வீரரான மப்பே தனது உலகக்கோப்பை சம்பளம் மற்றும் போனஸை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். #Mbappe
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் 19 வயதே ஆன கிலியான் மப்பே இடம் பிடித்திருந்தார். இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

    உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் உலகக்கோப்பை தொடரில் கிடைக்கும் சம்பளம் மற்றும் போனஸை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை பயிற்சிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி மப்பே ஒரு போட்டிக்கு தலா 29 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார்.



    இதன்மூலம் 7 போட்டிகளில் விளையாடி இரண்டு லட்சத்து 3 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார். உலகக்கோப்பையை வென்றதால் போனஸாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் டாலர் கிடைத்தது. இரண்டையும் சேரத்து கிடைத்த 5 லட்சத்து 53 ஆயிரம் டாலரை (3 கோடியே 80 லட்சம் ரூபாய்) தற்போது நன்கொடையாக வழங்கியுள்ளார்.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இரண்டாம் இடம் பிடித்த குரோசியா அணிக்கு அந்நாட்டின் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரவேற்பு அளித்தனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14-ந்தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குரோசியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் அர்ஜென்டினாவை 3-0 என துவம்சம் செய்தது. அதன்பின் நாக்அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதியை கடந்து முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் 2-4 என தோல்வியடைந்து வரலாற்றுச் சாதனையை தவறவிட்டது. என்றாலும் குரோசியா அணி வீரர்கள் அபார விளையாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



    அவர்கள் 2-ம் இடத்தோடு நேற்று சொந்த நாடு திரும்பினார்கள். குரோசியா தலைநகரான சக்ரெப்பில் கால்பந்து அணிக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குரோசியாவின் மக்கள் தொகை சுமார் 43 லட்சம்தான். இதில் இரண்டரை லட்சம் மக்கள் தலைநகரில் குவிந்து வரவேற்பு கொடுத்தார்கள். அத்துடன் வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
    ரஷியாவில் பெய்த ஒரே நாள் கனமழையால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட மைதானம் சேதமடைந்தது. #WorldCup2018 #Volgograd
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ரஷியாவில் கோடிக்கணக்காக பணத்தில் பல்வேறு மைதானங்கள் கட்டப்பட்டன.

    அதில் ஒன்று தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வோல்கோகிராட் மைதானமும் ஒன்று. இந்த மைதானம் சுமார் 1757 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாகும். இங்கிலாந்து - ஜப்பான் இடையிலான நாக்அவுட் போட்டி உள்பட 8 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோவில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. போட்டி முடியும் தருவாயில் கனமழை பெய்தது. அப்போது வோல்கோகிராட்டிலும் கனமழை பெய்தது.



    அதுவும் வரலாறு காணாத மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மைதானம் அருகே ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானத்தை அரித்துச் சென்றது. இதனால் மைதானத்தின் வெளிப்பபுறத்தில் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. அதில் சேறு குவிந்துள்ளது.



    பலகோடி ரூபாய் செலவிட்டு கட்டப்பட்ட மைதானம் ஒரு மழைக்கே தாங்காமல் போனது அங்குள்ள மக்களை வேதனையடையச் செய்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்காக கட்டப்பட்டுள்ள மைதானங்களை ரஷியா எதற்காக பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய வீரர்களை வைத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று சிறந்த லெவன் அணியை வெளியிட்டுள்ளது. #WorldCup2018
    ரஷியாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது முறையாக அந்த அணி உலககோப்பையை வென்றது.

    உலககோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய வீரர்களை வைத்து ஆங்கில பத்திரிகை ஒன்று உலக லெவனை வெளியிட்டுள்ளது. 4-3-3 என்ற பார்முலாவில் வெளியிட்டுள்ள அந்த அணி வருமாறு:-

    கோல் கீப்பர்: கோர்ட்டஸ் (பெல்ஜியம்).

    பின்களம்: மியூனியர் (பெல்ஜியம்), ரபெல் வரேன் (பிரான்ஸ்), வெர்டோன்ஹென் (பெல்ஜியம்), ஹெர்னாண்டஸ் (பிரான்ஸ்).

    நடுகளம்: டி புருயின் (பெல்ஜியம்), நிகோலா காண்டே (பிரான்ஸ்), மோட்ரிக் (குரோஷியா).

    முன்களம்: எம்பாப்வே, கிரீஸ்மேன் (பிரான்ஸ்), ஈடன் ஹசாட் (பெல்ஜியம்). #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France
    பாரீஸ்:

    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.



    இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    உலகக்கோப்பையில் மோசமான தோல்வியால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Worldcup2018
    ரஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றோடு முடிவடைந்தது. இதில் பிரான்ஸ் கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று அர்ஜென்டினா. அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா மூலம் தட்டுத்தடுமாறி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.



    நாக்அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 3-4 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. அர்ஜென்டினா தோல்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்ளொலி முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.

    இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்ப்பௌலி விலகியுள்ளார்.
    ×