search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women hockey"

    • ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்தன.
    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது.

    இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

    கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    ஜின்சியான்:

    இந்திய பெண்கள் ஹாக்கி அணி கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வென்றது.

    இந்நிலையில், கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய தரப்பில் கேப்டன் ராணி 37வது நிமிடத்தில் ஒரு கோலும், நவ்ஜோத் கவுர் 50வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
    இளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன. #YouthOlympicSilver #India #WomenHockey
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் கலந்து கொண்டுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதன் ஆக்கி (5 பேர்) போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் அந்த முன்னிலையை இந்திய அணியால் நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. ஆட்டம் போகப்போக இந்திய அணியினரின் தடுப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வை பயன்படுத்தி மலேசிய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது.



    முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இந்திய அணி சார்பில் கேப்டன் விவேக் சாகர் பிரசாத் 3-வது மற்றும் 6-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மலேசிய அணி தரப்பில் பிராதுஸ் ரோஸ்டி 5-வது நிமிடத்திலும், அகிமுல்லா அனார் 14-வது மற்றும் 19-வது நிமிடத்திலும், ஆரிப் இஷாக் 17-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

    பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. இந்திய அணி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த கோலை மும்தாஜ் கான் அடித்தார். அதன் பின்னர் அர்ஜென்டினா அணியினரின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறினார்கள். அத்துடன் அந்த அணியின் தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்தால் அதனை தகர்த்து இந்திய அணியினரால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் அசுர தாக்குதலை தொடுத்த அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து 3 கோல்களை திணித்தது. அந்த அணியின் ஜியானெல்லா பாலெட் 7-வது நிமிடத்திலும், சோபியா ராமல்லோ 9-வது நிமிடத்திலும், பிரிசா புருக்ஜெஸ்செர் 12-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

    இந்திய அணி இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி என்று மொத்தம் 10 பதக்கங்கள் வென்று 10-வது இடத்தில் உள்ளது. ரஷியா 24 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என்று 43 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. #YouthOlympicSilver #India #WomenHockey
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    லண்டன்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று ‘சி’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்த பிரிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் கால்இறுதியை உறுதி செய்தது. அர்ஜென்டினா (4 புள்ளி), ஸ்பெயின் (3 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டின. தென்ஆப்பிரிக்கா (2 புள்ளி) வெளியேறியது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. #WomenHockey #WorldCup2018 #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அயர்லாந்து அணி ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறும். கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்ஆப்பிரிக்கா (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இன்றைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அது எங்களுக்கு நல்ல தொடக்கமாகும். அந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல நேர்மறையான எண்ணங்களை பெற்று இருக்கிறோம். அது இந்த போட்டி தொடரில் வரும் ஆட்டங்களில் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நமது அணியின் ஆட்ட திறன் எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் அந்த ஆட்டத்தின் வீடியோவை அணியினர் அனைவரும் பார்த்ததுடன், இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து ஆலோசித்தோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்கலாம் என்பதே எங்கள் எண்ணமாகும்.

    அமெரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் வீடியோ பதிவையும் நாங்கள் பார்த்தோம். அந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே நல்ல முன்னிலை பெற்றதுடன் அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது. கடந்த 3 நாள் ஓய்வில் எங்களுக்குள் சில பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டோம். கோல் அடிப்பது குறித்து வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தோம். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் எதிரணிக்கு நெருக்கடி அளிக்க வேண்டும். அடுத்த சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenHockey #WorldCup2018 #India #Ireland 
    ஸ்பெயினுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்தியா 4-1 என அசத்தல் வெற்றி பெற்று தொடரை 2-2 என டிரா செய்தது. #WomenHockey
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஸ்பெயின் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கியிருந்தது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் நேற்று மாட்ரிட்டில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 4-1 என ஸ்பெயினை துவம்சம் செய்து தொடரை 2-2 என சமன் செய்தது.



    ராணி 33-வது நிமிடத்திலும், 37-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தார். அதேபோல் குர்ஜித் கவுர் 44-வது மற்றும் 50-வது நிமிடத்திலும் கோல் அடிக்க இந்தியா 4-0 என வலுவான முன்னிலைப் பெற்றது. அதன்பின் 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லோலா ரியேரா 58-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடிக்க இந்தியா 4-1 என வெற்றி பெற்றது.
    ஐந்து போட்டிகள் கொண்ட ஸ்பெயின் அணிக்கெதிரான ஹாக்கி தொடரின் 4-வது ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் 1-4 என தோல்வியை சந்தித்தனர்.
    இந்தியா- ஸ்பெயின் பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஸ்பெயின் 3-0 என வெற்றி பெற்றது. 2-வது போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. 3-வது போட்டியில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நடைபெற்றது இதில் இந்தியாவை 4-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    ஸ்பெயின் வீராங்கனை லோலா ரியேரா 10 மற்றும் 34-வது நிமிடத்திலும், லூசியா 19-வது நிமிடத்திலும், கார்மென் கானோ 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் 22-வது நிமிடத்தில் உதிதா கோல் அடித்தார்.

    நாளை கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை டிரா செய்யும். தோல்வியடைந்தால் ஸ்பெயின் தொடரை வெல்லும்.
    ×