search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் ஹாக்கி- 4-வது ஆட்டத்தில் இந்தியாவை 4-1 என வீழ்த்தியது ஸ்பெயின்
    X

    பெண்கள் ஹாக்கி- 4-வது ஆட்டத்தில் இந்தியாவை 4-1 என வீழ்த்தியது ஸ்பெயின்

    ஐந்து போட்டிகள் கொண்ட ஸ்பெயின் அணிக்கெதிரான ஹாக்கி தொடரின் 4-வது ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் 1-4 என தோல்வியை சந்தித்தனர்.
    இந்தியா- ஸ்பெயின் பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஸ்பெயின் 3-0 என வெற்றி பெற்றது. 2-வது போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. 3-வது போட்டியில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 4-வது போட்டி இன்று நடைபெற்றது இதில் இந்தியாவை 4-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    ஸ்பெயின் வீராங்கனை லோலா ரியேரா 10 மற்றும் 34-வது நிமிடத்திலும், லூசியா 19-வது நிமிடத்திலும், கார்மென் கானோ 37-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் 22-வது நிமிடத்தில் உதிதா கோல் அடித்தார்.

    நாளை கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை டிரா செய்யும். தோல்வியடைந்தால் ஸ்பெயின் தொடரை வெல்லும்.
    Next Story
    ×