search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை பாராட்டிய துருக்கி அதிபர்
    X

    ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை பாராட்டிய துருக்கி அதிபர்

    இனவெறி தாக்குதல் நடைபெற்றதாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற மெசுட் ஒசிலை துருக்கி அதிபர் பாராட்டியுள்ளார். #MesutOzil
    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 2014 சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது. ஜெர்மனி அணியில் 29 வயதான மெசுட் ஒசில் இடம்பிடித்திருந்தார். இவரது பூர்வீகம் துருக்கியாகும். உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்திருந்தார்.

    இந்த போட்டோவை வெளியிட்டு ஜெர்மனி அணிக்காக விசுவாசமாக விளையாடினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அணியின் முதன்மை அதிகாரிகளில் சிலர் எர்டோகனுடன் சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டிறிந்தனர்.

    இதனால் மனமுடைந்த மெசுட் ஒசில் ஜெர்மனி அணியில் அருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘நான் மெசுட் ஒசில் உடன் போனில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது. இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஒசிலின் கண்களில் முத்தமிட்டேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஜெர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

    அர்செனல் அணிக்காக விளையாடும் மெசுட் ஒசில் 2009-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வரை 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். கடந்த 2013ல் இருந்து அர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார்.
    Next Story
    ×