என் மலர்
செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து - ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி
ஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #EcuadorFireAccident
குயிட்டோ:
ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #EcuadorFireAccident
Next Story






