search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ecuador"

    • ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார்.
    • தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார். அப்போது போலீசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

    தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.

    • ஃபிடோ எனும் கொள்ளைக்கார கும்பல் தலைவன் சிறையிலிருந்து தப்பித்தான்
    • நேரலை நிகழ்ச்சியின் போது ஆயுதம் ஏந்திய கும்பல் தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறியது

    தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையாரம் உள்ள நாடு, ஈக்வடார் (Ecuador).

    கடந்த திங்கட்கிழமை ஈக்வடாரில், பல குற்றங்களை புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட அடால்ஃபோ மேசியஸ் வில்லமார் (Adolfo Macias Villamar) எனும் கைதி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டான். அவனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ஃபிடோ (Fito) என காவல்துறையால் அழைக்கப்படும் அவன், கோனெரோஸ் (Choneros) கும்பல் எனும் தொடர் குற்றங்களை புரிந்து வரும் ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்கார குழுவின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து, 60 நாட்கள் எமர்ஜென்சி அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டின் குவாயாக்வில் (Guayaquil) பகுதியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்றில், துப்பாக்கிகளை ஏந்தி, முகமூடி அணிந்த ஒரு கும்பல் அதிரடியாக நுழைந்து நிலையத்தை கைப்பற்றியது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலில் 13 பேர்களை கைது செய்தனர்.

    ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா (Daniel Noboa) அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இச்சம்பவத்தால், ஈக்வடார் நாட்டின் அருகே உள்ளெ பெரு (Peru) தனது எல்லையை பலப்படுத்தி உள்ளது.

    • 2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டனர்
    • எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பு ஆயுத வேட்டையை நடத்தி, சில கைதிகளை இடம் மாற்றியது

    தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ.

    இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும், ஈக்வடார் நாட்டில் சமீப காலம் வரை போதை பொருள் சம்பந்தமான சிக்கல்கள் தோன்றாமல் அமைதியான நாடாகவே இருந்து வந்தது. தற்போது அங்கு நிலைமை மாறி, போதை பொருள் கடத்தலில் ஒரு முக்கிய மையமாகவே இந்நாடு மாறி வருகிறது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் அந்நாட்டு சிறையில் கைதிகளாக உள்ளனர். அவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து வருவது வழக்கம். அண்மைக் காலமாக அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒரு கும்பலை சேர்ந்த கைதிகள் மற்றொரு போட்டி கும்பலை தாக்குவதும், கூட்டாக கொல்வதும் அதிகரித்துள்ளது.

    2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படுபவர்களின் உடல்கள் கூட முழுமையாக கிடைக்காமல் துண்டு துண்டுகளாக கிடைக்கிறது. அந்நாட்டில் சிறைச்சாலை மேற்பார்வையை எஸ்.என்.ஏ.ஐ. எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

    எஸ்.என்.ஏ.ஐ. உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் வேட்டை ஒன்று நடைபெற்று அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையாக பல கைதிகள் இடம் மாற்றி தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தலைநகர் குவிடோவில் கையெறி குண்டு தாக்குதலும், சிறைச்சாலை மேற்பார்வையை கவனிக்கும் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு காரிலும், அந்த அமைப்பு இயங்கிய அலுவலகத்தின் அருகில் ஒரு இடத்திலுமாக, 2 இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது.

    இது சம்பந்தமாக கொலோம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் முன்பே ஆள் கடத்தல், கொள்ளை, மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தங்கள் பலத்தை காட்ட இது போன்ற வன்முறை தாக்குதல்களில் இக்குழுக்கள் ஈடுபடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு சிறைச்சாலையை சேர்ந்த 6 சீர்திருத்த நிலையங்களில் உள்ள கைதிகள் உட்பட 57 சிறை காவலாளிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகளை, அங்குள்ள போதை பொருள் கடத்தல் சிறை கைதிகள், சிறைக்குள்ளேயே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

    அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் ஜபாடா பணயமாக உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். #EcuadorHeavyRains
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 ஆயிரத்து 700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    #EcuadorHeavyRains
    ஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #EcuadorFireAccident
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #EcuadorFireAccident
    ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #EuadorEarthquake
    குவைட்டோ:

    ஈக்வடார் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    கடந்த 2016-ம் ஆண்டில் ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 650-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #EuadorEarthquake
    ×