என் மலர்
நீங்கள் தேடியது "ஈக்வடார்"
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈக்வடார்:
ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
- மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.
எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.
- 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
- இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.
தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.
இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.
மற்ற ஆட்டங்களில் பொலிவியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் ,உருகுவே 2-0 என்ற கணக் கில் வெனிசுலாவையும் தோற்கடித்தன. அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது.
- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
- இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
- குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.
மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஃபிடோ எனும் கொள்ளைக்கார கும்பல் தலைவன் சிறையிலிருந்து தப்பித்தான்
- நேரலை நிகழ்ச்சியின் போது ஆயுதம் ஏந்திய கும்பல் தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறியது
தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையாரம் உள்ள நாடு, ஈக்வடார் (Ecuador).
கடந்த திங்கட்கிழமை ஈக்வடாரில், பல குற்றங்களை புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட அடால்ஃபோ மேசியஸ் வில்லமார் (Adolfo Macias Villamar) எனும் கைதி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டான். அவனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ஃபிடோ (Fito) என காவல்துறையால் அழைக்கப்படும் அவன், கோனெரோஸ் (Choneros) கும்பல் எனும் தொடர் குற்றங்களை புரிந்து வரும் ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்கார குழுவின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, 60 நாட்கள் எமர்ஜென்சி அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் குவாயாக்வில் (Guayaquil) பகுதியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்றில், துப்பாக்கிகளை ஏந்தி, முகமூடி அணிந்த ஒரு கும்பல் அதிரடியாக நுழைந்து நிலையத்தை கைப்பற்றியது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலில் 13 பேர்களை கைது செய்தனர்.
ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா (Daniel Noboa) அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தால், ஈக்வடார் நாட்டின் அருகே உள்ளெ பெரு (Peru) தனது எல்லையை பலப்படுத்தி உள்ளது.
- ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார்.
- தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார். அப்போது போலீசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.






