என் மலர்
நீங்கள் தேடியது "prisoners"
- பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
- திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார்
நெல்லை:
பாளை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை கைதிகள்
இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளாகவும், சிலர் பழிக்கு, பழி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ நூலகத்துறை சார்பில் சிறைச்சாலைக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கைதி களுக்கு புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. பலர் சிறைக்குள் இருந்தே படித்து கல்லூரி பேராசிரி யராகவும் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் மற்ற கைதிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் உயரும் விதமாக அவர்களுக்கு புத்தகங்களை வழங்கிட சமூக ஆர்வலர்கள் ஆசைப்படுகின்றனர்.
நூலகம்
ஆனால் இந்த நூலகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் புத்தகங்களை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
அந்த அறைக்கு சிறை கைதிகளுக்கு புத்தக தானம் செய்யும் அறை என பெயரிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக வழங்க விரும்பும் புத்தகங்களை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை சிறை காவலர்கள் எடுத்துச்சென்று சிறையில் உள்ள நூலகத்தில் சேர்ப்பார்கள்.
ரூ.25 ஆயிரம் புத்தகம்
இன்று திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார். அதனை உதவி ஜெயிலர் சண்முகம், முதல் தலைமை காவலர் முத்துச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழில் அதிபர்கள் மவுலானா, பீர் மைதீன், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் இயக்குனர்கள் எஸ். செய்யது முகம்மது, எம்.செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது.
- அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.
திருச்சி :
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை. சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் நலன் கருதி தாமதிக்காமல் உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக சிறைகளில் இஸ்லாமிய சிறைவாசிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கபட்டு சிலர் இறந்துள்ளனர். மேலும் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எந்தவித பாரம்பட்சம் பார்க்காமல் தமிழக அரசு முன்வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே தமிழக சிறைகளில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் கருணையின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
- 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.
மேட்டுப்பாளையம்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு கோவை செல்லும் வழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டு ஆயுள் சிறைவாசிகளுக்காக உரிமை குரலை முழக்கம் இடமுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து வருகின்றோம்.
இதே கோரிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 8 -ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை பற்றி விவாதித்து முடிவெடுத்து பரிசீலனை பெறுவதற்காக நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்தது. 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.
நாங்கள் பதிவு தபாலில் அனுப்பி வைத்த கோரிக்கை மனு கூட இந்த முகவரியில் அலுவலகம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர், பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசார், துணைச் செயலாளர் ஜாபர் அலி, காஜாமைதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- முகாம் சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
- செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கான முகாமில் அதிக அளவில் செல்போன் பயன்பாடு மற்றும் போதை பொருட்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் மீண்டும் முகாம் சிறையில் தங்கியுள்ள 156 பேரில் பெரும்பாலானவர்கள் செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கூர்மையான ஆயுதங்களும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக வெளியான தகவலின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் செல்போனை மீண்டும் தரக்கோரி கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- கைதிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் நடைபெற்றது.
- சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்ய வேண்டும்
திருச்சி:
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் 15 நாட்கள் பெருந்திரள் நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் ந மாவட்ட துணைச் செயலாளர் காஜா, மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா,மாவட்ட இளைஞரணி சேக், ஆழ்வார்தோப்பு துணைச் செயலாளர் முபாரக்,சமயபுரம் பகுதி செயலாளர் பாருக் மற்றும் பாண்டியன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
- டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
- சிறை அதிகாரிகள் விசாரணை
வேலூர்:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி (வயது 33).
பல வழக்குகளில் தொடர்புடைய இவர் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கை, கால்களை அறுத்து கொண்டு ரகளை செய்தார்.
இதனைக் கண்ட சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.
புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த சிறைத் துறை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி இன்னும் 20 நாளில் தமிழக ஜெயில்களில் உள்ள அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
13 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள 3600 தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 13 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற கைதிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய 2 இன்சூரன்ஸ் திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அசு தோஸ் சுக்லா கூறியதாவது:-

இப்பணிகளை 2 வாரத்துக்கு முன்பு தொடங்கினோம். தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இன்னும் 2 வார காலத்தில் சேர்க்கப்படுவார்கள்.
மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தை சிறைத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் திட்டத்தில் மரணம், விபத்து மற்றும் உறுப்புகள் இழப்பு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை உள்ளது. அதன்படி விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும். கைதி விபத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ஜெயிலில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டப்படுகிறது. #TNPrisoners #Insurance