கைதிகளுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்

மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர். கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
கைதிகளுடன் கைப்பந்து விளையாடிய போலீசார்
Published on

மதுரை

தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com