என் மலர்
நீங்கள் தேடியது "சிறைத்துறை"
- மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.
குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.
- தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
- இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
- 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் குமரி மாவட்டத்தின் 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறைவாசி களுக்காக புத்தகம் தானம் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதையொட்டி புத்தக கண்காட்சியில் தானம் பெற பெட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பாளை யங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட கிளை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமாணிக்கம் மற்றும் சிறை காவலர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் குமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் தானம் செய்கிறார்கள்.
- பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
- ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.
நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர்.
'இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.
இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற 'சிறைகளின் கலை' என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.
இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
- போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
சேலம்:
தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.
இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.
- மதுரை சிறைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
மதுரை
மதுரை மத்திய சிறையில் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தமிழக சிறைப்பணி என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை சிறைவாசியாக இருந்து விடுதலையான 2 நபர்களுக்கு அவர்கள் சிறையில் செய்து வந்த பணியின் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள் தொழில் செய்யும் வகையில் சலவை பெட்டி மற்றும் தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு மற்றும் பாத்திரங்கள் அடங்கிய ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மதுரை சரக சிறை துறை துணை தலைவர் பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு பரசுராமன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய சிறைப் பணிகள் நிறுவனத்தின் தமிழக மாநிலச் செயலாளர் ஜேசு ராஜ் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனிடிக்ஸ் ஆகியோர் வழங்கினர்.






