இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்- நீதிமன்றம் உத்தரவு

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்- நீதிமன்றம் உத்தரவு
Published on

நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com