என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க்"
- ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்பது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு.
- பைக்கில் வந்த நபர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரை பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் , நேற்று அதிகாலை 5 மணியளவில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் பம்புக்கு பைக்கில் இருவர் வந்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, 55 வயதான தேஜ் நாராயண் நர்வாரியா என்ற ஊழியர் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் பைக்கில் வந்த நபர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது, அவர்கள் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டனர். இதில் அவரின் கையில் குண்டடி பட்டது.
தாக்குதல் தொடர்பான காட்சிகள் பெட்ரோல் பங்கின் சிசிடிவிவியில் பதிவானது.
காயமடைந்த நர்வாரியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளிலின் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- அரிபா கான் ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தனது தந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, பெண் ஒருவர் பெட்ரோல் பங்க ஊழியர் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஷாஹாபாத்தில் வசிக்கும் இஷான் கான், தனது மனைவி மற்றும் மகள் அரிபா கானுடன் பெட்ரோல் பங்கிற்கு தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.
சிஎன்ஜி நிரப்பும் போது, இஷான் கானுக்கும் ரஜ்னீஷ் குமார் என்ற பம்ப் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஊழியர் இஷானை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இது கேமராவில் பதிவாகியுள்ளது.
தனது தந்தை தள்ளப்படுவதைக் கண்டு கோபமடைந்த அவரது மகள், காரை நோக்கி ஓடிச் சென்று, ஒரு துப்பாக்கியை எடுத்து ஊழியரின் மார்பில் நேரடியாக குறிவைக்கிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க ஊழியர் ரஜ்னீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இஷான் கான், அவரது மனைவி ஹுஸ்பானோ மற்றும் மகள் அரிபா கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
- பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தருமாறு வாக்குவாதம்.
- வாக்குவாதம் அதிகரிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்த பெட்ரோல் பங்க் மானேஜரை இருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளனர். ஊழியர் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் கையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.
இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மானேஜர் கூறினால் நிரப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மானேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல நிரப்ப கூறியுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும், பெட்ரோல் பங்க் மானேஜருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மானேஜரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மானேஜர் படுகாயம் அடைந்து கீழே சரிந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மானேஜரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மானேஜர் உயிரிழந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
- பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.
வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.
திருமங்கலம்
மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.
பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.
- கைதிகள் 30 பேருக்கு வேலை கிடைக்கும்
- ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மத்திய ஜெயிலில் 2100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
ஜெயில் அங்காடியும் தனியாக நடத்தப்படுகிறது. பெட்ரோல் பங்க்கில் ஜெயில் கைதிகள் 30 பேரும், அலுவலர்கள் 10 பேரும், ஜெயில் அங்காடியில் 4 பேரும் வேலை பார்க்கின்றனர்.
ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.
இதற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த ஜெயில் நிர்வாகம் 2-வது பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் நுழையும் இடத்துக்கு அருகே பாரதியார் சலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, இன்னொரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
மத்திய ஜெயில் கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறியதாவது:-
டாக்டர் நஞ்சப்பா சாலை யில் ஜெயில் நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பாங்க் தான் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பங்க்குகளின் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.
சுத்தமான பெட்ரோல் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும் பங்க் மூலம் கைதிகள் 30 பேருக்கும், அலுவலர்கள் 10 பேருக்கும் வேலை கிடைக்கும்.
இதில் வேலை பார்க்கும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களும், குடும்பத்தினரும் பயன் பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன.
- 2,000 ரூபாயை பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார்.
சென்னை:
2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், அவற்றை செப்டம்பர் மாதத்துக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து பலரும் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.
சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரி பிரசாத் (வயது 31). இவர் பெரம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உள்ளார்.
கையில் சில்லரை இல்லாததால் அங்கிருந்த ஊழியரிடம் 2,000 ரூபாய் கொடுத்தார். அதனை அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் ஹரிபிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சில்லரை இல்லாவிட்டால் மோட்டார் சைக்கிளில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துவிடு என்று ஊழியரிடம் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த ஊழியர் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
- ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.
நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர்.
'இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.
இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற 'சிறைகளின் கலை' என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.
இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
- பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
நேற்று அதிகாலை பதுக்கி வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த நிலையில் பட்டாசுகள் அங்குள்ள பெட்ரோல் பம்ப் மீது விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
தீயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடி சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
- விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
தோவாளை 4 வழிச்சா லையில் புதிதாக கிளா ஸ்கோ பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. அகத்தியர் முனி குழ ந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பேட்ரிக் சேவியர், பங்குதந்தைகள் பிரைட் (தேவசகாயம் மவுண்ட்), ஸ்டீபன் (குறு ம்பனை), புரூனோ (வட சேரி), கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகி யோர் அர்ச்சிப்பு செய்தனர். ஜாஷ்வா அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் மனோதங்கராஜ் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். டீசல் வினியோக எந்திரத்தை எச்.பி.சி.எல். மதுரை துணை பொது மேலாளர் செல்ல பிரபு திறந்து வைத்து முதல் விற்ப னையையும் தொடங்கி வை த்தார். அதனை குமரி விற்ப னை அலுவலர் டிம் ஜெ ய்ரூஸ் பெற்று க்கொ ண்டார். பெட்ரோல் வினி யோக எந்திரத்தை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். அதனை எச்.பி.சி.எல். மதுரை ரீடெய்ல் என்ஜி னீயரிங் தலைமை மேலாளர் சுரேஷ்குமார் பெற்று க்கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்கு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாக இயக்குனர் போஸ்கோ நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
- நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.
இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.
தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
- மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
- இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






