என் மலர்
இந்தியா

பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு: பெட்ரோல் பங்க் மானேஜர் சுட்டுக்கொலை- உ.பி.யில் கொடூரம்
- பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தருமாறு வாக்குவாதம்.
- வாக்குவாதம் அதிகரிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்த பெட்ரோல் பங்க் மானேஜரை இருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளனர். ஊழியர் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் கையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.
இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மானேஜர் கூறினால் நிரப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மானேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல நிரப்ப கூறியுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும், பெட்ரோல் பங்க் மானேஜருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மானேஜரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மானேஜர் படுகாயம் அடைந்து கீழே சரிந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மானேஜரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மானேஜர் உயிரிழந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.






