என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுட்டுக்கொலை"

    • முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.
    • உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார்

    கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

    தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.

    உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார். இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. தனது நிறுவனத்தில் ஏராளமான பஞ்சாபிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.  

    • வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.
    • தீர்ப்பு வழங்கியதும் அங்கிருந்த குற்றவாளி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    டிரானா:

    அல்பேனியா நாட்டின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு கோர்ட் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார்.

    அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார்.

    இதில் நீதிபதி சம்பவ இடத்திலேயே சரிந்து இறந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பி, கோர்ட் பாதுகாப்பு அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
    • இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் (49) என்பவர் பெட்ரோல் பங்கை நிர்வகித்து வந்தார். இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

    அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது ஜேடன் மேக் ஹில்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
    • ஒரு அதிகாரி உள்பட 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் படை ஆகியவை இணைந்து இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் குண்டு பாய்ந்து பலியானான்.

    அவனது பெயர் என்ன? எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு அதிகாரி உள்பட 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

    • ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
    • கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    உக்ரைன் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய் (வயது 53). இவர் 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார்.

    இந்த நிலையில் ஆண்ட்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லிவீவ் மாகாணம் பிராங்க்ஸ்வி பகுதியில் ஆண்ட்ரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தந்தை கோபம்.
    • விடுதிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தர்பங்கா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்) 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். இங்கு முதலாம் ஆண்டு படித்து வருபவர் தானு பிரியா. இவரும் நர்ஸிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர்.

    மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், தந்தைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மகளின் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    தானுவின் தந்தை பிரேம்ஷங்கர் மருத்துவமனை விடுதிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் தானுவும், அவரது கணவரும் இருந்துள்ளனர். மேலும், ராகுல் குமாருடன் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    பிரேம்ஷங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுல் குமாரை சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராகுல் குமார் உடன் படிக்கும் சக மாணவர்கள் பிரேம்ஷங்கரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை நேற்று மாலை அணுகியுள்ளார். பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.

    "எனது தந்தை துப்பாக்கி வைத்திருந்தார். எனது கணவர் மார்பில் என் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டார். ராகுல் என் மடியில் சாய்ந்தார்" என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார்.

    மேலும், எனக்கு அல்லது எனது கணவருக்கு என்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தை நாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.

    • அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47) கொல்லப்பட்டார்.

    தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் காங்கிரஸ் பட்டியலின பிரிவு செயலாளர் எம். அனில், காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    திங்கள்கிழமை இரவு, அவரை இரு கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரது காரை வழிமறித்து துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், பண தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதற்கு ஒரு நாள் முன்னதாக, மாலக்க்பேட்டில் காலை நடைப்பயிற்சி சென்ற சி.பி.ஐ (கம்ம்யூனிஸ்ட்) மாநில கவுன்சில் உறுப்பினர் கே. சந்து நாயக் (47), அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

    நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட பகையால் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஒரு துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
    • பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஷேக்புரா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர கெவத் (வயது 52). பா.ஜ.க. சேர்ந்த அவர் அக்கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் சுரேந்திர கெவத் தனது வயல்கள் உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேந்திர கெவத் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் பிரபல தொழில் அதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதையடுத்து பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகாலி தளம் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான்.

    அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அதன்பின், அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

    மாவோயிஸ்டுகளை கூண்டோடு ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மண்டலத்தில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 27 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய தலைவர் பசவராஜ் கொல்லப்பட்டார்.

    70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தலைக்கு ரூ. 10 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டது.

    இவரைப் போலவே ஜன்முக்தி பரிஷத் என்ற மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு ஆகியோரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

    பப்பு லோஹாரா தலைக்கு ரூ.10 லட்சம் பிரபாத் கஞ்சு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இந்த மோதலில் மாவோயிஸ்டு முக்கிய தலைவர்களான பப்பு லோஹாரா மற்றும் பிரபாத் கஞ்சு இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர்.

    இந்த மோதலின் போது மாவோயிஸ்டு ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் வேட்டை நடந்து வருகிறது.

    • துப்பாக்கி சூடு சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.

    அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அருங்காட்சியம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

    இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தருமாறு வாக்குவாதம்.
    • வாக்குவாதம் அதிகரிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.

    பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவித்த பெட்ரோல் பங்க் மானேஜரை இருவர் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் சிகந்த்ராபாத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளனர். ஊழியர் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் கையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.

    இதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மானேஜர் கூறினால் நிரப்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மானேஜரிடம் சென்று பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல நிரப்ப கூறியுள்ளனர். அவர் மறுப்பு தெரிவிக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும், பெட்ரோல் பங்க் மானேஜருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் அதிகரிக்க கோபம் அடைந்த இருவரும், பெட்ரோல் பங்க் மானேஜரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மானேஜர் படுகாயம் அடைந்து கீழே சரிந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மானேஜரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மானேஜர் உயிரிழந்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×