search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money theft"

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62), தனியார் பள்ளி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (51). இவர் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமராவில் பணம் திருடும் காட்சிகள் பதிவு
    • போலீஸ் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியா(50) என்பவர்.

    புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் டீலர் ஷோரூம் நடத்தி வருகிறார்.அதன் பக்கத்தில் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(27) என்பவர் மீன் வறுவல் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சத்தியா என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை நூதனமாக உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6500 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்கள், கோபி என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து ரூ.5000 ஆகிவற்றை திருடிக்கொண்டு ஷட்டரை அப்படியே திறந்து விட்டு சென்றுள்ளார்.

    பின்னர் நேற்று காலை கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கடைகள் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கேமராவை பார்த்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவை சிக்காமல் இருப்பதற்கு ஒரு கேமராவை திசையை வேறு பக்கமாக திருப்பி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைக்குள் உள்ள கேமராவை ஆப் செய்து அதன் பிறகு தனது கைவரிசையை காட்டி கல்லாவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள் சத்தியா மற்றும் கோபி ஆகியோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
    • திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
    • வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அடுத்த உள்ள ஆணைக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற தங்கராஜ். (வயது 54). இவரது சொந்த ஊர் ஓசூர் ஆகும். இவர் ஆணைக்கவுண்டம் பட்டியில் வாடகை வீட்டில் தங்கி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஓசூருக்கு சென்றுள்ளார். 2 நாட்களுக்கு பின்னர் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20,000, மற்றும் 3 பவுன் தங்கசெயின் திருடு போயிருந்தன. இதனால் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    மற்றொரு சம்பவம்

    அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுபாஷ் (33). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தி ருந்தார். மனைவியை பார்த்து விட்டு சுபாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
    • மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் முத்துராஜ்(வயது 32). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2-ந்தேதியில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் நேற்று மதியம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தார். டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.14 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒட்டப்பிடாரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    நெல்லையை அடுத்த தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.

    அதனை அப்படியே வைத்து விட்டு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பழங்கள் வாங்கிவிட்டு திரும்பவும் மோட்டார் சைக்கிள் அருகே வந்தார்.

    அப்போது கவரில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சீதாலெட்சுமி வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    முத்துராஜ் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்தபோதில் இருந்து மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததும், அவர் பழக்கடைக்கு சென்றதை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி
    • 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி சப்- இன்ஸ்பெக்டர் வேல் குமார் தலைமையில் அதே பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த தால் அவரிடம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அவர் குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ரிஷி என்கிற ரதுஷன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரி கடையில் பணம் மற்றும் லேப்டாப் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் ரிஷியை கைது செய்தனர். இந்த கொள்ளையில் மற்றொரு நபரும் ஈடுபட்டு இருப்பதால் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.
    • கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

    மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 கோவில்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் உள்ள வல்லாண்டப்பன் கோவிலில் மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்து அதில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோல் வல்லாண்டப்பன் கோவில் அருகே உள்ள தஞ்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலையும் உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றனர்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அரியூர் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
    • அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.

    கொலை

    கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொடூர கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மர்ம கும்பலை விரைந்து பிடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அத்தாயம்மாள் கணவர் ராமசாமி மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் மக்களிடம் இது கொலை பற்றி விசாரணை நடத்தினார்.

    50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

    இந்த கொலை குறித்து துப்பு துலக்க மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையை யார் செய்தார்கள்? என இதுவரையிலும் தெரியாமல் உள்ளது. இதனால் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் ெகாலை, கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், காட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், ராமசாமிக்கு சொந்தமான ேதாட்டத்தில் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை நடந்த இடத்தில் அருகே உள்ள சாலைகளில் சென்று வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து தகராறு

    இதனிடையே உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    இதனால் இந்த கொலையில் அவர்க ளுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் இந்த கொலைக்கு கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சைபர்கிரைம் உதவியையும் தனிப்படை போலீசார் நாடி உள்ளனர். செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து சைபர் கிரைம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உளவுப்பிரிவு

    மேலும் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.ஐ.சி.யூ, போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளை யடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
    • ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே ஏழு பரனைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயி.

    இவருடைய மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கழுத்து அறுத்து கொலை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டுக்கு அருகே உள்ள சாலை கொட்டகையில் படுத்து தூங்கினார். அத்தா யம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கினார். நேற்று காலை ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    நகை, பணம் கொள்ளை

    மேலும் அத்தாயம்மாள் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கீதா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தினமும் இரவு அத்தாயம்மாள் வீட்டில் தனியாக தூங்கு வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    3 தனிப்படைகள்

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை யாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 63), இவர் காவேரிப்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இவரது தம்பியின் மகள் திருமணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நள்ளிரவு வீடு திரும்பினர்.

    பின்னர் அதிகாலை 4-மணியளவில் மீண்டும் குடும்பத்தினருடன் ஆரணி திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை 11-மணி அளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தத. இதில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்
    • தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார்

    தாராபுரம் : 

    தாராபுரம் அடுத்த கள்ளிமந்தயம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னிமலையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார். அவர்கள் கொடுத்த ரூ. 3 லட்சத்தை வாங்கி கொண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் புறவழிச்சாலையில் பஸ்சில் பயணம் சென்று கொண்டிரு ந்தார். அப்போது பஸ் தனியார் ஓட்டல் முன்பு நின்றது. அப்போது மஞ்சப்பையில் வைத்து இருந்த ரூ.3 லட்சம் பணத்தை அங்கிருந்த ஒருவர் திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து பணத்தைப் பார்த்த போது பஸ்சின் மேல் புறத்தில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆடிட்டர் தாராபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×