என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trickery"

    • தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
    • வீடு திரும்பினர் அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு நேற்று சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பெயரில் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்தது திண்டிவனம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்
    • வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×