சின்னசேலத்தில் டீக்கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருட்டு: ரெயில்நிலையம் அருகே துணிகரம்

வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று, மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சின்னசேலத்தில்  டீக்கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருட்டு: ரெயில்நிலையம் அருகே துணிகரம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த கடம்பன் மகன் வெங்கடேசன் (வயது 26) இவர் கடந்த 5 வருடமாக சின்னசேலம் ெரயில் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ,17 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com