திண்டிவனம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில்5 சவரன் நகை, பணம் திருட்டு: ஜன்னலை உடைத்து துணிகரம்

தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர். வீடு திரும்பினர் அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து.
திண்டிவனம் அருகே கூலித் தொழிலாளி வீட்டில்5 சவரன் நகை, பணம் திருட்டு: ஜன்னலை உடைத்து துணிகரம்
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரும் இவரது மனைவியும் தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு நேற்று சென்றனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்து. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற பார்த்தனர். வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.

இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பெயரில் ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் நடந்தது திண்டிவனம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com