என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகேபால் கூட்டுறவு சங்கத்தில் ரூ.28ஆயிரம் திருட்டு
- கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.
- விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அருகே, கடலூர் சாலையில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் அளவையாளராக கோமதி யும், உதவியாளராக சிவகு மாரும் பணிபுரிந்து வரு கின்றனர். நேற்று மாலை வழக்கம் போல் விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்து அதை ஆவின் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இன்று காலை விவசாயி களிடம் பால் கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவு சங்க கட்டிடத்திற்கு வந்த போது, ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
நள்ளிரவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக வைக்கப்பட்டி ருந்த ரூ.28ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பணியா ளர்கள் வாழப்பாடி போலீ சில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.