என் மலர்
நீங்கள் தேடியது "Mysterious persons"
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி, ஆறாகுளம் பிரிவு, உள்ளிட்ட பகுதிகளில்,இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் புதிய ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்தனர்.
- 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது.
- பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதாத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசாணி அம்மன் கோவில் காரமடை அடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது.
திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. கோவிலுக்கு காரமடை சுற்று வட்டார பகுதிகளான திம்மம்பாளையம் வெள்ளியங்காடு புங்கம்பாளையம், உட்பட 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கோவிலில் உள்ள தகர ஓடு மற்றும் மணி, இலைகள், வேல் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் கோவிலை சேதம் செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்களை விரைவில் கைது செய்வதாக கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
- பிரசன்னா சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது.
கடலூர்:
சிதம்பரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42) இவர் புவனகிரியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 29-ந் தேதி மாமியார் வீட்டிலிருந்து சிதம்பரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
- தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.
ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றனர்.
- 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ2,000 வீதம் ரு 4,000 அபராதம்.
விழுப்புரம்:
செஞ்சியை அருகே அவலூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் உமா ஆகியோரின் வீடுகளில் கடந்த 10.1. 2022 அன்று மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி வயக்காடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 37), சேலத்தை சேர்ந்த அண்ணாமலை (39), குமார், போளூரை சேர்ந்த சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். இவர்கள் மீது செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, வழக்கை விசாரித்த செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் மனோகரன் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 பேருக்கும் ஒவ்வொரு வழக்கிலும் தலா 3 ஆண்டு வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ2,000 வீதம் ரு 4,000 அபரா தமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மானோஜிபட்டி லட்சுமி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 42 ). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார் . திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவில் அலுவலகத்திலேயே தூங்குவது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வாசலில் கட்டிலில் தூங்கி னார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கார்மெண்ட்சுக்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த விக்னேஷ் யார் என்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். மறுநாள் இரவும் விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வெளியே தூங்கினார்.
நள்ளிரவு அங்கு வந்த முகமூடி நபர்கள் 2 பேர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணை குண்டை எடுத்து வீசி விட்டு தப்பினர். இதில் கட்டிலில் பட்டு அவை வெடித்தன. இதில் அதிர்ஷ்வசமாக விக்னேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் கட்டில் எரிந்து நாசமானது.
இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.
சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக விக்னேசை கொல்ல முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் ( வயது 33) . சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காண்பித்தது தெரியவந்தது.
இது குறித்த அவர் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
- மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).
இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.
அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.
அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.
இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
- சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அட்சயபுரீ ஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், கி.பி.13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இக்கோவிலில் வழிபட்டதாகவும் கல்வெட்டு உள்ளன. உடலில் ஏற்பட்ட ஊனம் இக்கோவிலில் நிவர்த்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்கு சனி பகவான் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். பூச நட்சத்திர பரிகார தலமாகமாகவும் விளங்கிறது.அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் வைக்க உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில், திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து சிலைகளை எடுத்து வந்து திருவிழா செய்வதற்கு சிரமமாக இருப்பதாக கருதிய கிராம மக்கள், அதற்கு பதிலாக கடந்த 2011ம் ஆண்டு கிராமத்தினர் ஐம்பொன் சிலைகளின் மாதிரியை கொண்டு சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகளை செய்து வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடந்த திருவிழா இரவு பூஜை முடிந்து அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை நடராஜர் சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அர்ச்சகர் அளித்த தகவலின் பேரில், கிராமத்தினர் கோவிலுக்கு வந்த போது கோவிலில் இருந்த பித்தளையான அஸ்திரதேவர், சிவகாமி அம்மன், பிரதோஷ நாயகர் சிலைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கோவில் செயலர் அலுவலர் தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் நேற்று கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 4 நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 20 கிலோ எடையும், சுமார் 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
- ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
- மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்
இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.
மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
- நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
நெய்வேலி அருகே வடக்குத்து காந்திநகர் வி.கே. சாமி தெருவில் வசித்து வருபவர் அப்துல் கனி அவரது மருமகன் சையது ரஹ்மான் வி.கே.சாமி தெருவில் வசிக்கின்றனர். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாகி நிஷா மற்றும் பேரன் சையது ரியாஸ் ஆகிய இருவரையும் கடந்த 30-ந் தேதி இவரது தந்தை அப்துல் கனி சென்னை விமான நிலையத்திற்கு சென்று சவுதி அரேபியா நாட்டிற்கு விமானம் ஏற்றிவிட்டு வந்ததாகவும் பின்னர் நேற்று காலை தனது மனைவியுடன் தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் முன்பக்கம் இருந்த இரும்பு கேட் மற்றும் மர கதவுகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அப்துல் கனி வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அப்துல் கனி நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் வீடு உடைக்கப்பட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.