search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery at merchant's house"

    • தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று பூண்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளார்.
    • இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

    பெரியகுளம்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் உதயகுமார் (30). வெள்ளை பூண்டு வியா பாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தெலுங்கர் தெருவில் உள்ள சுப்புராஜ் கணேசன் என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வியாபாரத்திற்காக வெளியூர் சென்று விடுவது வழக்கம்.

    இதனிடையே சுப்புராஜ் கணேசனின் மகள் ஹரிதா என்பவரை திருமணம் செய்து அதே வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிதாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றார். அங்கேயே பூண்டு வியாபாரமும் பார்த்து வந்துள்ளார். இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்து ள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த உதயகுமார் வடுகபட்டிக்கு வந்து தனது வீட்டை பார்த்துள்ளார். பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடி க்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தென்கரை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்த கொள்ளை யில் தனது மாமியார், மாமனாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தனது புகாரில் தெரிவித்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா கொள்ளை வழக்கு தொடர்பாக மாமனார் சுப்புராஜ் கணேசன், மாமியார் ஜமுனாராணி, ராஜாராம், சாந்தகுமாரி, முருகன், கருப்பையா, தாடி பாண்டி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரசன்னா சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது.

    கடலூர்:

    சிதம்பரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 42) இவர் புவனகிரியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 29-ந் தேதி மாமியார் வீட்டிலிருந்து சிதம்பரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4 கிராம் தங்க காசு ரூ.7000 பணம் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு ேபானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரசன்னா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×