சீர்காழி வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.
ரவுடி தினேஷ்.
ரவுடி தினேஷ்.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.

ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com