தஞ்சையில், பெண்ணிடம் 11½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.
தஞ்சையில், பெண்ணிடம் 11½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).

இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.

அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.

அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com