என் மலர்
நீங்கள் தேடியது "Prison"
- மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.
எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.
- அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன.
- கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
இந்திய சிறைச்சாலைகளில் 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன .
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட கடைசி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில்இது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1521 பேர் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் இருந்துள்ளனர். இதில் 102 தற்கொலைகள்.
அதேபோல் 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான மரணங்களில், அதில் 119 தற்கொலைகள் ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
கைதிகளின் மனநலப் பிரச்சனைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
- அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது.
- இங்கு சுமார் 1,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை செயல்பட்டு வந்தது.
- 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் (Alcatraz) சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.
1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்
தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது
- தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.
- தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
- தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.
ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
- 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.
நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.
வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.
இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.
அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.
னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
- சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
மதுரை:
மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை கூடல் புதூர், ரயிலார் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மத்திய ஜெயிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், "நான் மதுரை மத்திய ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்புகிறேன். எனக்கு 92 வயது ஆகிறது. எனவே புத்தகங்களுடன் நேரடியாக ஜெயிலுக்கு வர இயலவில்லை. ஜெயில் அதிகாரிகள் நேரில் வந்து புத்தகத்தை வாங்கி சென்றால், பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
முதியவரின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவரிடம் "உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-
சிறைச்சாலைகளில் கைதிகள் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த 92 வயதான பெரியவர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது சேகரிப்பில் இருந்து 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கி உள்ளார்.
வாழ்நாள் எல்லாம் சேகரித்து வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு பகுதியை, சிறை கைதிகளின் நலனுக்காக வழங்கிய அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்த செய்தியை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.
நான் மிசா காலத்தில் அரசியல் கைதியாக ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு அங்கு உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்றைத் தாண்டி நிறைய நாவல்களை படித்து அறிந்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் பாராட்டு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மத்திய சிறைக்கு 300 புத்தகங்கள் வழங்கியதை கேள்விப்பட்டு, தமிழக முதல்வர் என் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் பெருமை தருகிறது. இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்கு நன்றி சொல்லவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.
- காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
- லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி:
காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, மயிலாடுதுறை மாவட்டம் பருத்திகுடி கிராமப் பகுதி யில் உள்ள மண் குவாரியில் இருந்து, மணல் அளவுக்கு அதிகமாக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக, காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
சாலையில் அதிகப்படியான பள்ளங்கள் தோன்றுவதால், ஆற்று நீர் ஊரில் உட்புகும் அபாய நிலை உள்ளது இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், சாலையை உடனடியாக சீர் செய்து தரவேண்டும். அளவுக்கு அதிகமான லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். சாலை சீர்செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு லாரிகளை விடுவித்தனர்.
- பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்
- சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க அரசிற்கு உத்தரவு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான கூலித்தொழிலாளி 9-ம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.25 ஆயிரமும், அபராத தொகையையும் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
- 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி 6 மாத கர்ப்பம்
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மனோஜ்குமார் (வய து 22). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு ெசய்து போக்சோ சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.






