முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க அரசிற்கு உத்தரவு
முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான கூலித்தொழிலாளி 9-ம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.25 ஆயிரமும், அபராத தொகையையும் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com