என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைக்கைதி"

    • அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது.
    • இங்கு சுமார் 1,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.

    இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    • விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
    • குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

    லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    • சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன.
    • விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுகன்யா சாந்தா சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிறைச்சாலைகளில் உள்ள கையேடுகள், விதிகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.முரளிதர் ஆஜராகி, 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன' என வாதிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு குறித்து கேள்வி எழவில்லை. விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்' என வாதிட்டா்ா.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளை தொகுக்குமாறு மூத்த வக்கீல் எஸ்.முரளிதரை கேட்டதுடன், சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவித்து தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

    ×