search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warden"

    • பரமக்குடி மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுதி வார்டனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை கோரிக்கை.
    • மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் ஜெபஸ்டியனுக்கு அங்கு விடுதி வார்டனாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் என்பவர் இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதற்கு மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றி மாணவனின் தந்தை பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறியதாவது:-

    எனது மகன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் விடுதி வார்டன் ராஜ்குமார், மது மற்றும் கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த எனது மகன் தற்போது பள்ளி செல்ல மறுத்து வீட்டில் உள்ளார்.

    எனவே எனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது பள்ளி நிர்வாகமும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய சொகுசு காரை கடந்த ஜூன் மாதம் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சிறை வார்டன் மாதேஸ் (வயது 28), அவருடைய நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எரித்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் நரசோதிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருடைய சொகுசு காரையும் மாதேஸ், விக்னேஷ் ஆகியோர் எரித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே மாதேஸ் சிறை வார்டனாக பணி புரிந்துக்கொண்டு குற்றங்களில் ஈடுபட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த மாதேஸ் கடந்த டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகளுடன் இரும்பாலை பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம் களங்காணியை சேர்ந்த ரங்கசாமி என்பவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.1,200 மற்றும் கைகெடிகாரத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசார் மாதேஸ், கார்த்திக், சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த முன்னாள் சிறை வார்டன் மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள மாதேசிடம் போலீசார் வழங்கினார்.
    புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை வாடர்ன் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் முரளி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு முறை முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்கர் முரளிக்கும், சக கைதிகளுக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் பாஸ்கர் முரளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புழல் சிறையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறை தலைமை வாடர்ன் நாகராஜ் மற்றும் சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 
    ×