என் மலர்
நீங்கள் தேடியது "Farmer"
- என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
- மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.
குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.
மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.
எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.
- நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.
- மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.
நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த விடியா திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த விவசாயிகள் பார்த்துப் பார்த்து விளைவித்த நெய்மணிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையில் முளைத்து விவசாயிகள் கண் முன்னே வீணாகிறது. நெல் கொள்முதலில் ஃபெயிலர் மாடன் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முயையிட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத்தில் கடன் வளங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அஇஅதிமுக ஆட்சியில் 1000 மூட்டையாக அதிகரித்தும்; 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.
ஆனால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை
என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதவை 1000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையடுத்து பருவமழைக்கு முன்னதாகயே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று. அஇஅதிமுக சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அதையெல்லாம் திமுக அரசு காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து விடியலுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் விவசாயிகள் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்குக் தேவையான தார்ப்பாய்களைக்கூட விடியா திமுக அரசு கொடுக்கவில்லை.
எனவே, மழையில் நனைந்து நெல்மணிகள் வீனாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நோலையாகக் காட்டிய பிறகும், இந்த நீயசக்தி திமுக அரசுக்கு இரக்கம் பிறக்கவில்லை.
சட்டமன்றத்தில் இது தொடர்பாக நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ் நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகள் நிறக்கப்பட்டுள்ளன.
தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. என்று சமாளிக்கிறாரே தவிர, முழுமையாக நெல்மணிகள் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், இப்போதே 22 சதவீத ஈரப்பத நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கலாமா என்று அமைச்சர் கேட்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஏனென்றால் இப்போதே பருவ மழை தொடங்கி அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் ரோட்டில் கிடக்கிறது. அறுவடைக்குத் தயாரான நெல்பணிகள், தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமே இல்லை.
மேலும், "செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசிடம் அறுமதி பெற்றுத் தந்தால் நெய் தேங்கும் நிலை ஏற்படாது. அரிசி பதுக்கல் இருக்காது.." என்று உண்மைக்கு மாறாக மத்திய அரசு மீது பழி சுமத்தியிருக்கிறார். உண்மை என்னவென்றால் கடந்த ஆகஸ்ட் 18 அன்றே மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கியிட்டது.
இதை மறைத்து, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றுகிறது இந்த விடியா அரசு தமிழகத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா? விவசாயம் பற்றியும், ஒவ்வொரு பருவத்திலும் எந்த அளவுக்கு விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு எய்யளவு அதிகம் விளையும் என்பதைக்கூட கணிக்கமுடியாத ஒருவர், அமைச்சராக இருப்பதற்குத் நகுதி இருக்கிறதா.?
நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு எற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா.? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நளையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?
இவை எதையும் செய்யாமல், போட்டோஷூட் நடத்துவதற்கும், புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்துவிடுமா?
பருவ மழை தீவிரமாகியிருப்பதாய் விவசாயிகளின் துன்பம் இரட்டிப்பாகிவிட்டது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.
டெல்டா மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயார இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து மீணாகிப் போவதுடன் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து மீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.
நாகையில் தொடர் மழை காரணமாக அரசு நோடி நெய் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் வீணாகி வருகிறது. இதைக் கண்டு விவசாயிகள் தமிழகம் முழுக்க சாலை மறியல், பஸ் மறியல் செய்யும் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.
மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த செப்டம்பர் பாதமே திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைக் கூட திறக்கவில்லை.
பருவ மழைக்கு முன்பாக தப்பித்துவிடலாம். தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று ஆசையோடு காத்திருந்த விவசாயிகள், இப்போது போட்ட முதல் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். நங்கள் ாழ்க்கையிலே இதுதான் இருண்ட தீபாவளி என்று விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை மட்டும் 7.968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB) தெரிவிக்கிறது. தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடியால் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் அபாயம் தென்படுகிறது.
எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் நிறப்பதோடு, அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும். விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
விடியா திமுக அரசு, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மாச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விவசாயி தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தாவுடன் எளிமையாக வந்து காரை வாங்கினார்.
- விவசாயி காரில் அமர்ந்ததும், சிறு பிரார்த்தனை செய்து, அதன் சிறப்பம்சங்களை ஆராய்கிறார்.
ஒரு விவசாயி தனது புத்தம் புதிய மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடி. விவசாயி தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தாவுடன் எளிமையாக வந்து காரை வாங்கினார்.
ஷோரூமுக்குள், விவசாயி உள்ளே நுழைந்து தனது புதிய காரை மூடி இருக்கும் உறையை திறந்ததும், அவரது மனைவி காருக்கு பொட்டு வைத்து, ஆரத்தி செய்கிறார். விவசாயி காரில் அமர்ந்ததும், சிறு பிரார்த்தனை செய்து, அதன் சிறப்பம்சங்களை ஆராய்கிறார்.
பின்னர் அமைதி, திருப்தியான புன்னகையுடன் காரை இயக்கி, நம்பிக்கையுடன் ஷோரூமிலிருந்து வெளியேறுகிறார். விவசாயி ரூ.3 கோடிக்கு கார் வாங்கியது குறித்து வலைத்தளவாசிகள் பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
- கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
- உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது.
- முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.
நகரி:
'உலகம் சுழல்வதற்கு உழவுதான் அடிப்படை' என்கிறார் திருவள்ளுவர். இந்த அகில உலகமும் விவசாயி இல்லாவிட்டால் இயங்காது. ஆனால் இன்று ஊருக்கு சோறிடும் விவசாயியின் நிலைமை எப்படி இருக்கிறது?.
பயிரிட்டு உரமிட்டு வளர்த்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், இயற்கையின் சீற்றத்தால் பயிர்கள் நாசமாகியும் வேளாண் தொழில் நஷ்டத்தை அடைகிறது. இதனால் முதலுக்கே மோசமாகி கடனாளியாக சிரமப்பட்டு வருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவர், தனது நிலத்தை உழுவதற்கு மாடும், டிராக்டரும் இல்லாததால் தனது மகனையும், மகளையும் ஏரில் பூட்டி உழுதுள்ளார். கடப்பா மாவட்டம் பெண்டிளிமர்ரி கிராமத்தை சேர்ந்த பண்டி சேகர்ரெட்டி என்பவர்தான் அந்த விவசாயி. இதுதொடர்பான வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
- இரண்டு விவசாயிகளுக்கு இடையே முன்பகை இருந்துள்ளது.
- இன்று தகராறு கைகலப்பில் முடிய, கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஜான்சன் குமரனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளா். அவரது உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது குமரன் உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
குற்றவாளி ஜான்சனை கைது செய்யும் வரை உடலை எடுத்து செல்ல விடமாட்டோம் என ஆம்புலன்சை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை உள்ளடக்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து நீரில் இருக்கும் வாழை மரங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.
- அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.
- தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
நெல், கரும்பு உள்ளிட்ட ஒரு சில பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளதுபோல வேளாண் பெருமக்கள் விளைவிக்கும் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமென வேளாண் பெருங்குடி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால் நெல், கரும்புக்கே உரிய ஆதார விலை அளிக்காமல் ஒன்றிய - மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. ஒரே விளைபொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்முதல் விலை இருப்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மாபெரும் அநீதியாகும்.
வேளாண் பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்க மறுத்து, விவசாயிகளை நட்டத்திற்கு ஆளாக்கி, அவர்களது குடும்பத்தை வறுமையில் வாடவிடும் திமுக அரசு, வேளாண்மைக்குத் தனிநிதிநிலை அறிக்கை வெளியிடுவதையே பெரும் சாதனை போல் விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.
ஆந்திர மாநில அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து அம்மாநில மாம்பழ விவசாயிகளைப் பெரும் நட்டத்திற்கு ஆளாகாமல் காத்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்குள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளிடம் பிற மாநில மாம்பழங்களைக் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இதனால், அங்குள்ள மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதார் அட்டை, வங்கி முகவரியை சோதித்து தமிழ்நாட்டு மாம்பழங்களைத் திருப்பி அனுப்புகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையும் திமுக அரசு நிர்ணயிக்கவில்லை. இதனால் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும்கூட, உரிய விலை கிடைக்காமல் தமிழக மாம்பழ விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
திமுக அரசு அந்த இழப்பீட்டையும் வழங்க மறுப்பதால் மாம்பழங்களை வீதியில் கொட்டிவிட்டு வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
விளைச்சல் குறைந்தால் உற்பத்தி செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல் நட்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.
கடுமையான உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற விளைச்சலும் கிடைத்த பின்னும் விவசாயிகள் வறுமையில் வாடி, பட்டினியாகப் படுத்துறங்க நேர்ந்தால் இந்த நாடு மாபெரும் பஞ்சத்தை எதிர்கொள்வதை எவராலும தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும். விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரியும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன்.
- மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.
பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கனமழையால் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் வீடியோ வைரலானது.
- விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் பேசினார்.
மகாராஷ்டிராவில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீணான விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
விவசாயியுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
- மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் விளைபொருட்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படுவது கரும்பும், மஞ்சளும் ஆகும். ஈரோடு மஞ்சளுக்கு இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை இல்லாமை, புதிய நோய் பாதிப்பு போன்ற காரணங்களினால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி பரப்பளவு மிகவும் குறைந்து கொண்டே வந்தது.
குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையே விலை கிடைத்ததால் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தியை கைவிடும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈரோடு மஞ்சள் விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கி குவிண்டால் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாய பெருமக்கள் மஞ்சள் பயிரிடும் பணியில் ஆர்வம் காட்ட தொடங்கினர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா காரணமாக மஞ்சள் மார்க்கெட் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
பிறகு மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்கள் காரணமாக மஞ்சள் மார்க்கெட் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெற்றன. இதனால் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை சற்று விலை குறைந்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 6 ஆயிரத்து 941 முட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதில் 3 ஆயிரத்து 119 மூட்டைகள் விற்பனையானது. சேலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 59 முதல் ரூ.15 ஆயிரத்து 93 வரை ஏலம் போனது. இதேபோல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 519 முதல் ரூ.14 ஆயிரத்து 539 வரை ஏலம் போனது.
மேலும் ஈரோடு சொசைட்டியில் உள்ள விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 569 முதல் ரூ.14 ஆயிரத்து 899 வரை ஏலம் போனது. இவ்வாறு மீண்டும் மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்தை கடந்து விற்பனையாவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.






