வேலூர் ஜெயிலில் கைதிகள் 2 பேர் திடீர் உயிரிழப்பு

ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
வேலூர் ஜெயிலில் கைதிகள் 2 பேர் திடீர் உயிரிழப்பு
Published on

வேலூர்:

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைப் போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் கடந்த 2019-ம் ஆண்டு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மே மாதம் 31-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com