search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மத்தியச்சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க புதிய அறை திறப்பு - சிறை பெட்ரோல் பங்கில் தொடக்கம்
    X

    பாளை மத்தியச்சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க புதிய அறை திறப்பு - சிறை பெட்ரோல் பங்கில் தொடக்கம்

    • பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
    • திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார்

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறை கைதிகள்

    இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளாகவும், சிலர் பழிக்கு, பழி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ நூலகத்துறை சார்பில் சிறைச்சாலைக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கைதி களுக்கு புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. பலர் சிறைக்குள் இருந்தே படித்து கல்லூரி பேராசிரி யராகவும் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் மற்ற கைதிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் உயரும் விதமாக அவர்களுக்கு புத்தகங்களை வழங்கிட சமூக ஆர்வலர்கள் ஆசைப்படுகின்றனர்.

    நூலகம்

    ஆனால் இந்த நூலகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் புத்தகங்களை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.

    அந்த அறைக்கு சிறை கைதிகளுக்கு புத்தக தானம் செய்யும் அறை என பெயரிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக வழங்க விரும்பும் புத்தகங்களை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை சிறை காவலர்கள் எடுத்துச்சென்று சிறையில் உள்ள நூலகத்தில் சேர்ப்பார்கள்.

    ரூ.25 ஆயிரம் புத்தகம்

    இன்று திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார். அதனை உதவி ஜெயிலர் சண்முகம், முதல் தலைமை காவலர் முத்துச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழில் அதிபர்கள் மவுலானா, பீர் மைதீன், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் இயக்குனர்கள் எஸ். செய்யது முகம்மது, எம்.செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×