search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி உயிரிழப்பு"

    • பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிலேயே ராஜசேகரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீஸ் விசாரணையின்போது மாரடைப்பு ஏற்பட்டதாலேயே ராஜசேகர் உயிரிழந்து உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் என்ற கைதி உயிரிழந்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    போலீசார் தாக்குதல் நடத்தியதால் தான் ராஜசேகர் உயிரிழந்து விட்டார். என்றும், எனவே இதில் தொடர்புடைய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கூறி வருகிறார்கள்.

    இதனை காரணம் காட்டி ராஜசேகரின் உடலை அவர்கள் வாங்க மறுத்து உள்ளனர். இதனால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிலேயே ராஜசேகரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்கி செல்வதற்காக போலீசார் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கைதி ராஜசேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் போலீஸ் சித்ரவதையால் ராஜசேகர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

    கடந்த 12-ந்தேதி அன்று பதுங்கி இருந்தபோது ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்து உள்ளனர். போலீஸ் விசாரணையின்போது 2 இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டு திருட்டு நகைகள் எங்கு உள்ளன? என்பதையும் ராஜசேகர் தெரிவித்து உள்ளார். இதன் பின்னர் ராஜசேகரை செங்குன்றம் பகுதிக்கு நகைகளை மீட்க அழைத்து செல்ல தயாரானபோது தான் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராஜசேகருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சிறிது நேரம் கழித்து வாந்தி வருவதாக ராஜசேகர் கூறியதை தொடர்ந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது நாடி துடிப்பு குறைவாக இருந்துள்ளது.

    இதையடுத்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற ராஜசேகர் உயிரிழந்துள்ளார். போலீஸ் விசாரணையின்போது மாரடைப்பு ஏற்பட்டதாலேயே ராஜசேகர் உயிரிழந்து உள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ராஜசேகரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    கைதி ராஜசேகரின் உடலில் வெளிக்காயங்கள் இருந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். ஆனால் போலீசார் இதனை மறுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பித்தக்கது.

    ×