search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner death"

    • மதுரை சிறையில் கைதி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் தங்கராஜி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    • கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

    சேலம்:

    தருமபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மகன் தங்கராஜி (வயது 41) .

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

    இதனை கவனித்த சிறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற சிறை அதிகாரிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜி இன்று காலை 6.10 மணிக்கு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சிறை கைதி இறந்ததால் ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகிறார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    வேலூர் ஜெயில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). கடந்த மாதம் 7-ந்தேதி ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்ந நிலையில் கடந்த 19-ந்தேதி லோகநாதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் குடியாத்தம் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), கடந்த ஆண்டு இவரது மனைவி வள்ளியை அடித்து கொலை செய்தார்.

    இந்த வழக்கில் குடியாத்தம் தாலுகா போலீசார் பிரபுவை கைது செய்ததனர்.பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டது.

    இதற்காக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று பிரபுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை சிறைதுறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் ஜெயிலில் கைதிகள் பலர் உடல் நலம் பாதிக்கபட்டு வருவது தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாரடைப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் உள்ள திரிசூல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந் தவர் சரவணன் என்ற தூள் சரவணன் (வயது 46). இவரை கொலை வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய புரம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறை யில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களாகவே சரவணனுக்கு உடல்நலக் குறைவு இருந்ததாக தெரி கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிறைத் துறை போலீசார் அவரை சிறையில் உள்ள ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோச மானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று சரவணன் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.

    இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கின்றனர்.

    ராஜீவ்காந்தி கொலை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன்காந்திக்கு வயிறு பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலு என்ற கைதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இன்று மேலும் ஒரு கைதி இறந்தார்.

    தர்மபுரி கடத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 54). 2013-ம் ஆண்டு கொலை வழக்கில் 5 வருட தண்டணை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    ஜெயிலில் மேலும் ஒரு கைதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் கைதி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் விநாயகம் (42). கடந்த மாதம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 1-வது பிளாக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த விநாயகம் இன்று காலை திடீரென்று மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல் நிலை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விநாயகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

    முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார். #Deathcase

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி ஆவார்.

    இவரது வீட்டில் நேற்று முன்தினம் 6 பவுன் நகை, ரூ.13 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாசிலா மணிமகன் மணிகண்டன் (30) என்பவரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் விசாரணை கைதி மணிகண்டன் மர்மமான முறையில் போலீஸ் நிலையத்திலேயே இறந்தார்.

    அவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்ததுடன் நுழைவுவாயில் கதவை பூட்டினர். மேலும் உறவினர்களிடம் எந்தவித தகவலும் கூற மறுத்து விட்டனர்.

    இறந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினர். மேலும் முதுகுளத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் முதுகுளத்தூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Deathcase

    ×