search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை"

    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம், தெற்குமாசி வீதி பீடர் மற்றும் தெற்கு வெளிவீதி பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

    இதன் காரணமாக நாளை (4-ந் தேதி) காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தெற்காவணிமூலவீதியின் ஒரு பகுதி, தெற்குமாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிக்கார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, பெருமாள் கோவில் சன்னதியின் ஒரு பகுதி.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ேராடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனகார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னைஓலைகார சந்து முகமதியர் சந்து ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
    புதுவிளாங்குடியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    மதுரை

    மதுரை மேற்கு  கோட்ட மின்வாரிய  செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆனையூர் துணை மின் நிலையம் சாந்திநகர் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் நாளை(4-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். பாலமேடு மெயின் ரோடு,சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர்,புது விளாங்குடி, கூடல் நகர், சொக்கநாதபுரம்,ராஜ் நகர்,பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசி வீதி,திண்டுக்கல் மெயின் ரோடு,விஸ்தாரா குடியிருப்பு,பரவை சந்தை, பாண்டியன் தியேட்டர்,வருமான வரி காலனி,டெய்சி காலனி,வைகை தெரு, கணபதி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 3 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே பழையனகோட்டை அருகே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை சரி செய்யப்படவில்லை. 

    இந்த பள்ளத்தால் இரவில் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளான சம்பவமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பு இதே பள்ளத்தில திருவெற்றியூரைச் சேர்ந்தவர் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    மேலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக அடிக்கடி தோண்டிய பள்ளங்கள் சாலைகளின் ஓரங்களில் சரி செய்யப்படாமல் இச்சாலை தரமற்ற நிலையில் உள்ளது. இதேபோல் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதாகி உள்ளது. 

    அந்த பள்ளத்தில் கடந்த மாதம் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த டி. கிளியூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
    மதுரை

    மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம், தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த கூட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்தில் புதியதாக 5 விமான நிறுத்தும் இடம், 2 ஹெலிபேடுகள், கூடுதல் பயணிகள் பாதை, வாகன நிறுத்தம், பேருந்து வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. 

    இதற்கான விரிவாக்கப் பணிகளுக்காக 95 சதவீதம் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிந்து உள்ளன. எனவே மீதமுள்ள பணிகளை முடிக்கும் வகையில் தமிழக அரசு நீர்நிலை வகை மாற்றம் குறித்து உத்தரவுகளை வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

    மதுரை கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    மதுரை

    மதுரை நன்மை தருவார் கோவில் தெருவில் உள்ள கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

    விழாவில் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    28-ந் தேதி 11 மணிக்கு அன்னதானம், அன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 8 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், 9 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் முளைப்பாரி யுடன் 4 மாசி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி மதியம் 2 மணிக்கு விளையாட்டுப்போட்டிகள், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 30-ந்தேதி அம்மன் பூஞ்சோலைக்கு அனுப்பும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    அவனியாபுரத்தில் டூவீலரில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அவனியாபுரம்

    பெருங்குடியை சேர்ந்தவர் சந்திரகிஷோர்  (வயது18) சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்குடியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்ய வந்து கொண்டிருந்தார். 

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் பெருங்குடி செல்ல வேண்டும் என லிப்டு கேட்டுள்ளார். 

    அவரை ஏற்று கொண்டு அவனியாபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு மற்றொரு வாலிபர் லிப்டு கேட்கவே அவரையும் அழைத்து விட்டு பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அவனியாபுரம் குருதேவ் நகர் பகுதியில் வாகனத்தை நிறுத்தச் சொல்லிய 2 வாலிபர்களும் சந்திரகிஷோரின்  செல்போன், செயின்,வாட்ச்,பணம் உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்து விட்டு தப்பினர்.இதுகுறித்து சந்திர கிஷோர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் லிப்டு கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ×