search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant suicide"

    • வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    சித்தாமூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது49). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து சென்ற அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் வெங்கடேசன் அச்சரப்பாக்கம் பெருக்கருணை சாலையில் இரும்பிலி கூட்ரோடு பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி அருகே வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
    • இவர் வைகை அணை சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது49). இவர் வைகை அணை சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

    உடல்நிலை பாதிக்க ப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார்.
    • ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). பானி பூரி வியாபாரியான இவர் திருவிழா காலங்களில் தனது உறவினர்களுடன் சேர்ந்து கூடுதல் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் ஆசைக்கு ஒன்று, அழகுக்கு ஒன்று, அந்தஸ்துக்கு ஒன்று என அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா, செல்வி, சித்ரா ஆகிய 3 பேரை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருமணம் செய்து கொண்டார்.

    இதில் செல்விக்கு ஒரு மகன், ஒரு மகளும், சித்ராவுக்கு ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் வளர்ந்து ஆளாகி திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன் பானி பூரி வியாபாரம் செய்து கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை குடித்தே அழித்து வந்தார். இதனால் 3 மனைவிகளுக்கும் குடும்பம் நடத்த சரியாக பணம் கொடுப்பதில்லை. இதனால் ராஜேந்திரனை முதலில் திருமணம் செய்து கொண்ட சகுந்தலா கணவரை பிரிந்து, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    அப்போது முதலே மற்ற இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் ராஜேந்திரனை வெறுக்க தொடங்கினர். நாளுக்கு நாள் முழு நேரமும் மது போதையில் திளைத்த ராஜேந்திரனை அவரது 2 மனைவிகள் மற்றும் உறவினர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மேலும் சாப்பாடு தரக்கூட யாரும் முன்வராததால் ராஜேந்திரன் பெரிதும் விரக்தியடைந்தார். ஒரு நாள் வியாபாரத்திற்கு செல்லும் அவர் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக மது குடிக்க செலவழித்தார். இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

    ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி, அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால் மனம் உடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி குன்னத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து, அதனுடன் விஷம் கலந்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    3 மனைவிகள், பிள்ளைகள் இருந்தும் ஒருவேளை உணவு கூட தராமல் குடும்பத்தினர் ஒதுக்கியதால் மனமுடைந்த பானி பூரி வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தேனி அருகே பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.


    தேனி:

    தேனி அருகே பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன்(52). பால் வியாபாரி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அகிம்சா நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 38). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.

    வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதத் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இதனால் மன வேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மனைவி அமலா (வயது 37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள பள்ளிவாசலுக்கு நாசர் தொழுகைக்காக சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பென்னி மற்றும் அமலா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய நாசர், தனது மனைவி உடல் சிதறி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து சுல்தான்பத்தேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- நாசரின் மனைவி அமலா மீது பென்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதை அவர் பலமுறை அமலாவிடம் கூறி உள்ளார். ஆனால் அமலா ஏற்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பென்னி நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். நேற்று மதியம் நாசர் பள்ளி வாசலுக்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த அமலாவை சந்திக்க வெடிகுண்டுடன் பென்னி சென்றார். அப்போது தனது காதலை வெளிப்படுத்தியும் அவர் ஏற்கவில்லை. உடனே தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்க செய்துள்ளார். இதில் 2 பேரும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவருக்கும் மனைவி பாலாமணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியை தாக்கினார். இதிலும் கோபம் தணியாத அவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலாமணி தலையில் போட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலாமணி இறந்தார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததை நினைத்து வேதனை அடைந்தார்.

    மேலும் போலீசுக்கு பயந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன்- பாலாமணி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வயிற்று வலி காரணமாக வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55). பொம்மை வியாபாரி. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் தண்டபாணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் தண்டபாணிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த தண்டபாணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தண்டையார்பேட்டையில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இரும்பு வியாபாரி. இவர் தொழிலுக்காக சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

    இதற்காக வாரம் தோறும் ரூ.25 ஆயிரம் வட்டி கட்டி வந்தார். கடன் வாங்கிய பணத்துக்கு அதிகமாக வட்டி கட்டினார். ஆனால் அவரிடம் கந்து வட்டிக்காரர்கள் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதுகுறித்து துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துரைமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துரைமுருகன் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், “என் தொழிலுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய தொகைக்கு அதிகமாக வட்டி கட்டி விட்டேன். ஆனாலும் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். மேலும் என்னை அவமானப்படுத்தி பேசினார்கள். இதனால் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி 3 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×