search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadipatti"

    • தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
    • முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.

    சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன், சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ராமன் கொடியேற்றினார். உருவபடத்திற்கு ஆசிரியர் ஜெயராஜ் மாலை அணி வித்தார். அரண்மனையார் ஞானசேகர பாண்டியன் குருபூஜையை செய்தார். அய்யாவு இருளாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். பேரூர் செயலாளர் பால்பாண்டி யன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் நிர்வாகிகள் செல்வம், உதயாபாலு, பால்பாண்டி, முருகன், வை.பாண்டி, ரூபன்சக்ரவர்த்தி, போஸ், விஜி, விக்னேஷ், கவாஸ்கர், ராமமூர்த்தி, சிரஞ்சிவி, ரமேஷ், பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார். மதுரை வடக்குமாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்றிய துணை செயலாளர் கருப்புமணி வண்ணன் வரவேற்றார்.

    மாநில பொருளாளர் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இதில் கம்பன் இலக்கியமன்ற தலைவர் புலவர் அழகர் சாமி, அ.தி.மு.க.பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் அன்பு, சின்னு கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார் .
    • முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் புதிய பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தாதம்பட்டி நீரேத்தான் மந்தி திடலில் நடந்தது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார் செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி துணை தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல். ஏ., வாகனங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்க புஸ்காட் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 22 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி, சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன், குருநாதன், சுசீந்திரன், மற்றும் தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், மருதுபாண்டியன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வாடிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு வராவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் மலர்விழி தலைமையில் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் இறங்கினர். வாடிப்பட்டி சந்தை பாலம் அருகே கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகைதீன்அப்பாஸ் (வயது39) ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 450 வைத்திருந்தார். அதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்தனர்.

    எலுமிச்சை வியாபாரியான நான் கோவையில் பணம் வசூல் செய்து வருகிறேன் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறியதை ஏற்கவில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

    மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது மனைவி பாலாமணி (37). இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு முருகன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவருக்கும் மனைவி பாலாமணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முருகன், மனைவியை தாக்கினார். இதிலும் கோபம் தணியாத அவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பாலாமணி தலையில் போட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலாமணி இறந்தார். இதனால் முருகன் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததை நினைத்து வேதனை அடைந்தார்.

    மேலும் போலீசுக்கு பயந்த முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முருகன்- பாலாமணி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    வாடிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், இவரது மனைவி உமாராணி (வயது 29) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளாள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி (22) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சிவமூர்த்தி உமாராணியின் மகளையும் பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் சிறுமி தனது அத்தை நல்லம்மாள் தேவியிடம் நடந்த சம்பவங்களை கூறி அழுதாள்.

    இந்நிலையில சிவமூர்த்தி அந்த சிறுமியை திருமணம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு உமாராணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு நல்லம்மாள் தேவியை சிவமூர்த்தியும் உமாராணியும் மிரட்டினர்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரெஜினா, போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் உமாராணி, கள்ளக்காதலன் சிவமூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    வாடிப்பட்டியில் வீட்டை உடைத்து நகை - பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டார் (வயது58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை கூடல்நகரில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய ஆண்டார், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் ஆண்டார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி:

    மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகநாதன் (வயது 24). இவர் சமயநல்லூர் அருகே பரவையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

    திண்டுக்கல்-திருமங்கலம் சாலையில் வைகை ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தது. திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடியது.

    அப்போது சண்முகநாதன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சண்முகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×