என் மலர்
நீங்கள் தேடியது "Brazil"
- சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார்.
அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார். இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.
ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார்.
- எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
- உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.
தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.
பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன.
- சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.
கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.
அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார்.
- இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் "ரெட் கமாண்ட்" என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக காவல்துறை நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடி ஆபரேஷன் மேற்கொண்டது.
ரியோ டி ஜெனிரோ நகரில் கோம்ப்லெக்ஸோ டி அலேமாவோ மற்றும் பென்ஹா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் 2,500 காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் கும்பல் மீது ஹெலிக்கப்பட்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு ஆபரேஷனில் நான்கு காவல்துறையினர் உட்பட 119 பேர் உயிரிழநதனர் என அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 113 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளன.

இந்தத் ஆபரேஷன், அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் சி40 சர்வதேச மேயர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
- தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரேசிலிய பெண்ணை பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை, அந்தப் பெண் ஒரு பிரபலமான செயலி மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.
பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் குமார் (21) வாசலில் வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். பயந்துபோன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் உடன் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் கூறினார். அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
இதையடுத்து, முதலாளி கார்த்திக் விநாயக் அளித்த புகாரின் பேரில், ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
பிரேசில் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிதக்கப்படட்டது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிரேசில் தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ தோல்வியடைந்தார்.
தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வி அடைந்ததாக குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடையில் அர்ஜென்டினாவுக்கு தப்பியோடும் அவரின் முயற்சியும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் போல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து 11 நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
- அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Bacabal நகரில் Mearim என்ற ஆறு உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சிறுமி குறித்து செய்தி சேகரிக்க லெனில்டோ ஃபிரசாவோ என்ற பத்திரிக்கையாளர் அங்கு சென்றுள்ளார்.
சிறுமி கடைசியாக காணப்பட்ட இடத்தை விளக்க லெனில்டோ ஆற்றில் இறங்கினார். அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னரே அவர் காணாமல் போன சிறுமியின் உடலை மிதித்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமியின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சிறுமி தனது நண்பர்களுடன் நீந்தும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
- மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
- விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
- பிரதமர் மோடிக்கு கானா அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்தது.
- பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் துடிப்பான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
- பிரிக்ஸ் உச்சி மாநாடு அடுத்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது.
- பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியது.
புதுடெல்லி:
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பயணத்துடன் மேலும் 4 நாடுகளில் அவர் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், இந்தப் பயணம் குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
- ஜூலியானா மரின்ஸ் எரிமலையில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார். அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.
- ஹாட் ஏர் பலூனில் 21 பேர் பறந்து கொண்டிருந்தனர்.
- திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள். பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.
இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர்.






