என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடுப்பூசி"
- தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசி.
- நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் வண்ணம் பூசவும் திட்டம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெரு நாய்கள் வலை மூலம் பிடிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் விட முடிவு செய்யப்படுகிறது.
தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில்
தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியம் கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
- கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் 'குக்கிராமங்களில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரி நோய்) போடும் பணி நடைபெறுகிறது.
இந்த தடுப்பூசி போடும் பணி வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் டிசம்பர் 21 முடிய உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி போடும் பணியை வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியத்தில் உள்ள கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
எனவேநான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட கால்நடை தொடர்பான விவரங்களை பதிவேற்றுதல் இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீதம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கால்நடை வளர்ப்போர்கள் கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்கனர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் 1500 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
- ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தளவாபாளையம் கால்நடை மருத்துவர் டாக்டர் கோபிநாத் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
- பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது
- கார்பா கொண்டாட்டத்தின் போது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.
ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.
- ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
- 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியம் குணமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும், 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும், 56 கால்நடை கிளை நிலையங்களும், ஒரு நடமாடும் கால் நடை மருந்தகமும், ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன்றிகளும் விவசாயயிகளால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் மற்றும் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது. மேலும், இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலட்டு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் இச்சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மோகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
- 46 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது
வேலூர்:
உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கால்நடை மண்டல இணை இயக்குனர் கோபி கிருஷ்ணா திட்ட அறிக்கை வாசித்தார். கால்நடைதுறை டாக்டர் அந்துவன் தலைமை தாங்கினார்.
முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் விதவிதமான நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்று மாவட்ட முழுவதும் சுமார் 46 இடங்களில் தடுப்பு ஊசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முகாமை விடுபட்டவர்களுக்கு மற்ற நாட்களில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குழந்தைக்கு முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
- தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கபின்-ஏஞ்சலின் தம்பதியர். இவர்களுக்கு சுஜன் என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று குழந்தைக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த குழந்தை சுஜன் அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
- கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக குழந்தையின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயியான இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார். நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார்.
நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர்.
நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 3 மாத குழந்தை தஸ்விக் ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், " கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை.
கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. இந்த குழந்தையுடன் 6 குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியில் இருந்து மருந்து செலுத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இந்த குழந்தையும் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் கவனிப்பில் வைக்கப்பட்டு நலமுடன் இருப்பதை அறிந்த பிறகே வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதனால், குழந்தை தடுப்பூசி குறைப்பாடால் இறக்கவில்லை.
குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கடலூர் ஜி.எச் மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்" என்றார்.
- கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயி. இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார்.
நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3 மாத ஆண் குழந்தை திடீரென்று இறந்தது அந்த கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
- 21 நாட்களுக்கு பின் கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
உடுமலை:
உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அதில், தற்போது மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
இது குறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவி, அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. உன்னி மற்றும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது.
நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும்.சிறு கன்றுகள் முதல் கறவை மாடுகள் வரை பாதிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.பண்ணைகளை சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 21 நாட்களுக்கு பின், கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.கால்நடைகளுக்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள, கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும் என்றனர்.