search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaccine"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
    • உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.

    உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

    • தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர்.
    • பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    சென்னை:

    உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் இன்றும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாதவரத்தில் உள்ள புறநகர் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர். வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சவுந்தர்ராஜன், டாக்டர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.
    • வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில்ராமபுரம் ஊராட்சியில் போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.

    இதைத் தொடர்ந்து சிறுமிக்கு உண்ணி காய்ச்சல் வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து கோணுழாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் ஆகியோர்கள் குழந்தையின் நலன் கருதியும் வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி மற்றும் சத்து மாத்திரைகளை வினியோகித்து வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவ அதிகாரி அபினேஷ் கூறியதாவது:-

    கிராமத்தில் வயல்வெளி பகுதிகள் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால் அதில் உள்ள சிறிய பூச்சிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்க்கு முன்பே அறிந்ததால் உரிய சிகிச்சை அளித்து வருகிறோம்.

    மேலும் கிராமங்களிலும், பரவாமல் தடுப்பு பணிகளை சுகதார பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்ணி காய்ச்சலுக்கு மக்கள் பீதி அடைய தேவை இல்லை என தெரிவித்தார்.

    • பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கிற்கு உலக சுகாதார இயக்கத்தின் புதுவை கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாயிரா பானு கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். புதுவை மாநில சுகாதார துறையின் இைண இயக்குனர் தடுப்பூசி பிரிவு டாக்டர் ராஜாம்பாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கல்லூரியின் இயக்குனர் அனில் ஜே.பூர்த்தி தலைமை வகித்தார். அறிவியல் கருத்தரங்கு துறையின் தலைவர் டாக்டர். சஜீவ் ஸ்லேட்டர் முன்னிலை வகித்தார்.

    இந்த கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில், போலியோ, தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, தொண்டை அடைப்பான் நோய், கக்குவான் இருமல், தசை விறைப்பு நோய்களை கண்காணிக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.

    இதில் உலகளாவிய தடுப்பூசி அட்டவணை மற்றும் அதில் மேம்படுத்தப்பட்டுள்ள சமீப சமுதாய மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு நன்றிரையாற்றினார்.

    • கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
    • 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பெயரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை அடுத்த குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

    இதனை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சையத் அலி முன்னிலையில் கால்நடை மருத்துவர் செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அந்தோணி, ஜெயந்தி, ஞானசேகரன் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.

    நாஞ்சிக்கோட்டை மற்றும் ஏழுப்பட்டி கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இன்னும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என கால்நடை உதவி மருத்துவர் செரீப் தெரிவித்தார்.

    • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சிக்கு மத்திய மந்திரி பாராட்டு
    • கால்நடைகளுக்கான தோல் நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது

    கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, லும்பி ப்ரோவாக் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

    இந்த தடுப் பூசியை வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கால்நடை பராமரிப்புதுறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் முன்னிலையில் இது கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ரூபாலா, உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது என்றார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆட்டு அம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

    மாடுகள் உள்பட வீட்டு விலங்குகளுக்கு தோல் நோயை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசியை காலதாமதமும் இல்லாமல் பெரிய அளவில் தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்று புனேயில் உள்ள கால்நடை மருத்துவ உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

    • கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர் வடக்கு மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பேரணி நடைபெற்றது.

    மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் யுஎஸ்எய்ட் மொமன்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையேற்று நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ் குமார், மருத்துவர் புவனி, பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், நித்தேஷ், ரேவதி அன்னலட்சுமி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியானது மதுக்கூர் வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மெயின் ரோடு வழியாக முக்கிய வீதிகள் வழியாக பெரமையா கோயில் வரை சென்று திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.

    • அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
    • பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி, அக்.13-

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.

    பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

    படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.

    குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.

    கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு நடந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே வெறி நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும், என்றார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் மாநகரில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 31,778 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரையிலான 42,300 இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 8,67,420 போ் என மொத்தம் 9,41,498 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 8,14,972 பேருக்கு முதல் தவணையும், 6,28,984 பேருக்கு இரண்டாவது தவணையும், 61,987 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 1,26,526 பேருக்கு முதல் தவணையும், 1,85,988 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் நிறைவடைந்த நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் 21,878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
    • 1,518 மையங்களில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 984 பேர் முதல் தவணை, 6,506 பேர் 2ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 14,388 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 21,878 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் செவிலியர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தலா 480, ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 960 பேர் என மொத்தம் 2,880 பேர் பணியாற்றினர்.

    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×