என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலரா"

    • காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
    • .2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டது.

    கார்டோம்:

    காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில், சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.

    தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், கடந்த 4 வாரங்களில் கார்டோம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    • ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.
    • காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுகின்றன.

    பாரத் பயோடெக்கின் காலரா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைகள் வெற்றி கண்டுள்ளன.

    பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தனது, வாய்வழி காலரா தடுப்பு மருந்து ஹில்ச்சோல் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஓகாவா மற்றும் இனாபா செரோடைப்கள் இரண்டிற்கும் எதிரான தன்மைகளை இந்த தடுப்பு மருந்து கொண்டுள்ளதாகவும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் செலுத்தும்போது Oral cholera vaccines (OCV) தன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.

    காலரா என்பது விப்ரியோ காலரா பாக்டீரியாவால் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்று ஆகும். காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில் OCV களுக்கான உலகளாவிய தேவை ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களை நெருங்குகிறது. ஐதராபாத் மற்றும் புவனேஸ்வரில் உள்ள பாரத் பயோடெக்கின் கூடங்கள் 200 மில்லியன் டோஸ் ஹில்சோல் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று அந்நிறுவனம் கூறுகிறது. 

    • கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.
    • 9 மாகாணங்களில் 8-ல் காலரா தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

    காலரா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜாம்பியாவிற்கு உதவும் வகையில், மருந்துகள் உள்பட சுமார் 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்களை இந்தியா இன்று விமானம் மூலம் அனுப்பியது.

    ஜாம்பியா நாட்டில் தற்போது திடீரென காலரா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த நாட்டுக்கு உதவ இந்தியா முன் வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் மருந்து உதவிப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.

    இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காலரா நோயால் பாதிக்கப்பட்ட சாம்பியா நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா சார்பில் செய்ய முடிவு செய்யப்பட்டதையொட்டி 3.5 டன் மருந்து உதவி பொருட்கள் இன்று சரக்கு விமானம் மூலம் அனுப்பபட்டு உள்ளது.

    இதில் குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துபொருட்கள் அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலரா தொற்று நோயால் ஜாம்பியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 600 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. சாம்பியாவின் 10 மாகாணங்களில் 9-ல் காலரா பாதிப்பு பதிவாகியுள்ளது.

    • பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. டெங்கு, காலரா, எலிக்காய்ச்சல், வெஸ்ட்நைட் காய்ச்சல் போன்றவை மக்களை தாக்கி உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 438 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு எலிக்காய்ச்சலும், 4 பேருக்கு காலராவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஓரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பலியானவர்களில் கொல்லத்தை சேர்ந்த ஆசிரியர் அஜீஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நிலம்பூர், வள்ளிக்குன்னு, பொதுக்கல்லு, எடக்கரை பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு காலரா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ளவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 26 வயது வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை தொடர்ந்து அங்கும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலம் சுகாதார துறை சார்பாக தண்ணீரை தொட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதாலும், காலரா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தண்ணீர் மூலமாக பரவும் நோய்களை தடுக்க மண்டல சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் ராட்சத தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நோய் பரவும் அபாயம் எதுவும் உள்ளதா, தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ×