என் மலர்
நீங்கள் தேடியது "Sudan"
- சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது.
- நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கார்டும்:
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையி லான 'சூடான் ஆயுதப் படை'கள் செயல்படுகின்றன. துணை ராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொட பான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபர் மாதம் கொடூர தாக்குதலை நடத்தின.
அப்போது அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 400 அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உள் பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர்.
துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட் டது. மேலும், ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமை களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரியை சிறைச்சாலையாக மாற்றி ஆயிரக்க ணக்கானோரை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார். இந்த போரில் இதுவரை 1% லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1% கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
- படகில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்தனர்.
- மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் தீவிரம்.
சூடானில் உள்ள நைல் நதியில் நேற்று பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியின் உள்ள ஷெண்டி மாவட்டத்தில் நைல் நதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தப் படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்திலிருந்து 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணியில் உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
மாயமானவர்களை மீட்க சிறப்பு மீட்புக் குழுக்களையும் போதிய உபகரணங்களையும் அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 முதல் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது, படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பயணிகளை ஏற்றுவது உள்ளிட்டவற்றைத்தால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
- மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.
- ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
- அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் RSF தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானிய மருத்துவர்கள் அமைப்பு இதை தெரிவித்துள்ளது.
சிவிலியன் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஆர்.எஸ்.எஃப் வெளிப்படையாக மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர்.
- சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன.
ஆப்பிரிக்க நாடான சூடானில், உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கு அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் துணை ராணுவத்தினரால் (RSF) இந்தியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
அவர் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ஆதர்ஷ் பெஹெரா என்று தெரியவந்துள்ளது.
அவரிடம் RSF போராளிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இரண்டு RSF போராளிகளுக்கு இடையில் உள்ள ஆதர்ஷ் -இடம் ஒரு போராளி, "ஷாருக்கானை உனக்கு தெரியுமா?" என்று கேட்கிறார்.
மற்றொருவர் RSF குழுவை வழிநடத்தும் தங்கள் தலைவரான முகமது ஹம்தான் டகலோ-வை புகழ்ந்து கோஷம் எழுப்பும்படி ஆதர்ஷ்-ஐ கட்டாயப்படுத்துகிறார்.
ஆதர்ஷ் பெஹெராவுக்கு மனைவி, 8 மற்றும் 3 வயது வயதுடைய குழந்தைகள் உள்ளனர். அவர் 2022 முதல் சூடானில் உள்ள சுக்ரதி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் உள்ள அல் ஃபாஷிர் நகரத்திலிருந்து பெஹெரா கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 18 மாத முற்றுகைக்குப் பிறகு RSF படைகள் சமீபத்தில் அந்நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்தன. அங்கிருந்து அவர் நியாலா நகரத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இந்தியாவிற்கான சூடான் தூதர் முகமது அப்துல்லா அலி எல்டோம் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அல் ஃபாஷிரில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு முற்றிலுமாக சரிந்துவிட்டது.
அங்கு அவர்களுடன் யாரும் பேச முடியவில்லை. பெஹெராவுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் பாதுகாப்பாகத் திரும்புவார் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
- மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
- இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.
சூடானில் துணை ராணுவப் படை (RSF) மசூதி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று மக்கள் கூடியிருந்த சமயத்தில் இந்த டிரோன் தாக்குதலானது நடந்துள்ளது,
தாக்குதலுக்குப் பிறகு, மசூதி இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏப்ரல் 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயந்துள்ளனர்.
குறிப்பாக எல் ஃபாஷர் நகரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.
- நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
- நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
- அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.
சூடானில் அகதிகள் முகாம் மீது துணை ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.
சூடானில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் அல்-ஃபாஷிருக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமான அபு ஷோக் முகாம் மீது திங்கள்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.
இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம் கடந்த காலங்களிலிலும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
அரசு படைகள் மற்றும் ஆர்எஸ்எப் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இதுபோன்ற முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியாகினர்.
கெய்ரோ:
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
- .2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டது.
கார்டோம்:
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.
தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், கடந்த 4 வாரங்களில் கார்டோம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
- டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை), வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தின் தலைநகரான எல்-ஓபெய்டில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது RSF ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நகரம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. RSF தாக்குதல்கள் இங்கு நிலைமையை மேலும் மோசமாகியுள்ளன.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் RSF ஆல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான போர்ட் சூடானில், RSF தொடர்ந்து ஆறு நாட்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமாகின. இவற்றில் மின்சார கட்டமைப்பு மற்றும் சிவில் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.
- இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
- ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 பேர் உயிரிழநதனர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா தேரிவித்துள்ளது.






