என் மலர்
நீங்கள் தேடியது "paramilitary clash in Sudan"
- சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது.
- நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கார்டும்:
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டில் பயங்கரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே இந்த போருக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ராணுவம் தரப்பில் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையி லான 'சூடான் ஆயுதப் படை'கள் செயல்படுகின்றன. துணை ராணுவம் தரப்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப். எனப்படும் விரைவு அதிரடிப் படை செயல்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் இருவரும் இணைந்து ஆட்சியைப் பிடித்தாலும், பிறகு துணை ராணுவத்தை அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது தொட பான பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்-பாஷர் நகரை கைப்பற்றுவதற்காக ஆர்.எஸ்.எப். படைகள் கடந்த அக்டோபர் மாதம் கொடூர தாக்குதலை நடத்தின.
அப்போது அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் 3 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 400 அப்பாவி பொதுமக்கள் நகருக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓட முயன்ற குழந்தைகள் உள் பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தனர்.
துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட் டது. மேலும், ஆப்பிரிக்க பழங்குடியின பெண்களை குறிவைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்கொடுமை களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரியை சிறைச்சாலையாக மாற்றி ஆயிரக்க ணக்கானோரை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார். இந்த போரில் இதுவரை 1% லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1% கோடி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
- சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
- சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.






