search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா."

    • மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் இவர்களை பாதித்துள்ளது
    • சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

    உலகம் முழுவதும் உள்ள 8 பெண்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு துன்புறுத்தலுக்கும் ஆளாவதை ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று [அக்டோபர் 11] அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் [8 இல் ஒருவர்] பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லாது, இணையவழியில் 65 கோடி பெண்கள் [5 இல் ஒருவர்] துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

    சகாரா ஆப்பிரிக்காவில் 7.9 கோடி பெண்களும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.5 கோடி பெண்களும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளைச் சேர்ந்த 7.3 கோடி பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பெண்களும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் 4.5 கோடி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழலால் படைக்கப்பட்டுள்ள நாடுகளில் அதிக அளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநா அமைப்பின் அகதி முகாம் பகுதிகளில் தங்கியுள்ள 4 பெண்களில் ஒருவர் அங்கு வருவதற்கு முன் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

    பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளே அதிகம். ஒருமுறை துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளே மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதால் அதன் மனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்கம் அவர்களை விட்டு நீங்குவதே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் உள்ளிட்டவற்றால் அவதியுறும் இவர்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 முதல் 31 கோடி பேர் 18 வயதுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

    • லெபனான் - இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் 120 கிலோமீட்டர் நீளமுள்ள புளூ லைன் அருகே அமைந்துள்ளது.
    • இன்று காலை ராணுவ பீரங்கிகள் நடத்திய தாக்குதலில் 2 அமைதிப்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    லெபனானில் நிலை கொண்டுள்ள ஆகிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த அமைதிப் படையில் அங்கம் வகிக்கும் 600 இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

    ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து லெபனான் நகரங்களின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியாவுக்குள்ளும், பாதுகாப்பான இடங்களை தேடியும் இடம்பெயந்து வருகின்றனர்.

    இந்நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் 120 கிலோமீட்டர் நீளமுள்ள புளூ லைன் அருகே எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நகோவுரா [Naqoura] நகரத்தில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படைகளின் [UNIFIL] தலைமையகம் மற்றும் அதை சுற்றிய நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கு இன்று காலை ராணுவ பீரங்கிகள் நடத்திய தாக்குதலில் 2 அமைதிப்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா. நிலைகளை பாதுகாப்பு தடுப்பாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

     

    இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதல்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புளூ லைன் பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது. ஐ.நா. [வளாகம் மீது தாக்குதல் நடத்தக்கூடாது] விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும்.

     

    ஐ.நா. அமைதிப்படையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமைதிப்படையினருக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக ஐ.நா இந்த தாக்குதல்கள்  குறித்து தெரிவித்துள்ளது. காசா போர் தொடங்கியது முதல் ஐ.நா.வின் அறிவுரைகளை ஏற்காத இஸ்ரேல், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து இடங்களுக்கு ஆறு நாடுகள் போட்டியிட்டன.
    • தாய்லாந்து, சைப்ரஸ், கத்தார், தென்கொரியா, மார்ஷல் தீவு அதிக வாக்குகள் பெற்றன.

    சவுதி அரேபியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வலது குழுக்கள் புகார் அளிக்க ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவில் இணைவதற்கான வாய்ப்பை சவுதி அரேபியா இழந்துள்ளது.

    193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபை, 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பபை நடத்தியது. இவர்கள் 47 நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இடம் பிடிப்பார்கள். புவியியல் சார்பிலான பிரநிதிகள் அடிப்படையில் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

    இவர்கள் வடகொரியா, ஈரான், மியான்மர் மன்றும் உக்ரைன் போரில் ஆகிவற்றில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த வருடம் ஆசிய-பசிபிக் குழுவில் ஐந்து இடங்களுக்கு ஆறு நாடுகள் போட்டியிட்டன. இதில் தாய்லாந்து 177 வாக்குகள் பெற்றது. சைப்ரஸ், கத்தார் தலா 167 வாக்குகள் பெற்றன. தென்கொரியா 161 வாக்குகள் பெற்றது. மார்ஷல் தீவு 124 வாக்குகள் பெற்றது. சவுதி அரேபியா 117 வாக்குகள் பெற்றர்து.

    இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாக, ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குனர் லூயிஸ் சார்போன்னோ, மனித உரிமை கவுன்சிலில் பணியாற்ற சவுதி அரேபியா தகுதியற்றது எனத் தெரிவித்தார்.

    2022 மற்றும் 2023-ல் ஏமன்-சவுதி எல்லையில் எத்தியோப்பியால் இருந்து புலம் பெயர்ந்தவர்களை சவுதி எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2018-ல் சவுதி அரேபிய பத்திரிகையாளர் இஸ்தான்புல்லில் கொலை செய்யப்பட்டதில் அரசின் செயல்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.

    மேலும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது அதுபோன்ற அட்டூழியங்களைச் செய்து, அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கங்கள், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்டக் குழுவில் இடம் பெறக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றைய தினம் மத்திய காசாவில் அழ- புரெஜ் [Al-Bureij] அகதி முகாம்  மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா [Al-Awda] மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

    மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார். 

     

    • வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
    • பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இந்த ஆண்டு இறுதி வரையில், நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் கூட்டாளியாகவும், பங்களிப்பாளராகவும், கூட்டணி அமைப்பவராகவும் எங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவோம். இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள செய்வதில், நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், பகிர்ந்து கொள்வோம்."

    "இவை பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகிறோம். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

    • மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை.
    • இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக ஐ.நா.பிரதிநிதி தகவல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு சுமார் ஒரு கோடியே  60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை என்று ஐ.நா.சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


    வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பாதிப்பு என பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த அவர், இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  


    சிறு குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் குடிதண்ணீர், உணவு மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திறந்த வெளியில் வாழ்வதாகவும், வெள்ளத்தால் கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1,545 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 12,850 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×