என் மலர்
இந்தியா

பாரத் பயோடெக் காலரா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனை வெற்றி.. முக்கியத்துவம் என்ன?
- ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.
- காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுகின்றன.
பாரத் பயோடெக்கின் காலரா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைகள் வெற்றி கண்டுள்ளன.
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தனது, வாய்வழி காலரா தடுப்பு மருந்து ஹில்ச்சோல் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஓகாவா மற்றும் இனாபா செரோடைப்கள் இரண்டிற்கும் எதிரான தன்மைகளை இந்த தடுப்பு மருந்து கொண்டுள்ளதாகவும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் செலுத்தும்போது Oral cholera vaccines (OCV) தன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.
காலரா என்பது விப்ரியோ காலரா பாக்டீரியாவால் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்று ஆகும். காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் OCV களுக்கான உலகளாவிய தேவை ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களை நெருங்குகிறது. ஐதராபாத் மற்றும் புவனேஸ்வரில் உள்ள பாரத் பயோடெக்கின் கூடங்கள் 200 மில்லியன் டோஸ் ஹில்சோல் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று அந்நிறுவனம் கூறுகிறது.






